Your cart is empty.
வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல்
ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை விளக்கும் கட்டுரைகள். இந்துத்துவம் பற்றிய நுண்மையான பார்வையும் பகுப்பாய்வும் இக் கட்டுரைகளின் சிறப்பு.
ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை விளக்கும் கட்டுரைகள். இந்துத்துவம் பற்றிய நுண்மையான பார்வையும் பகுப்பாய்வும் இக் கட்டுரைகளின் சிறப்பு.
· திருவாளர் சிதம்பரத்தின் போர்
· தோழர்களுடன் ஒரு நடைப் பயணம்
· கடையரை எட்டும் புரட்சி
மூன்றே மாதங்களில் முதல் பதிப்பு விற்பனையாகி சாதனை படைத்திருக்கும் நூல். இந்தியாவின். எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் அருந்ததிராயால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ‘நொறுங்கிய குடியரசு'. உலக வல்லரசாக எழுச்சிபெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் அசலான தன்மையை இந்நூல் ஆராய்கிறது. நவீன நாகரிகம் பற்றிய அடிப்படையான கேள்விகளையும் எழுப்புகிறது.
புலிகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? இந்த உலகிற்கும் மானுட வாழ்விற்கும் அதனால் என்ன நன்மை? வேங்கைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
வேங்கை பற்றிய ஆய்விலும் வேங்கைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவரும் உயிரியலாளர்களில் ஒருவர் உல்லாஸ் கரந்த். உலக அளவில் புகழ்பெற்ற உயிரியலாளரான இவர் தனது ஆய்வுகளின் அடிப்படையில் எழுதிய இந்த நூல் மேற்காணும் கேள்விகளுக்கு விடையளிக்கிறது.
புலிகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான தகவல்களைக் கொண்ட இந்த நூல் விறுவிறுப்பான வாசிப்புக்கு உரியது. தமிழில் சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்தில் முன்னோடிகளில் ஒருவரான தியடோர் பாஸ்கரன் இந்த நூலை அதன் சுவை குன்றாமல் தமிழில் தந்திருக்கிறார்.