Your cart is empty.
கொத்து 6 ( சுற்றுவழிப்பாதை, தங்ஙள் அமீர் , சேவல்களம் )
-----நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
To get 15.00% discount on All books 2025 Spend ₹1,000.00 more from All books 2025
-தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கும் மா. கிருஷ்ணன் (1912-1996) தலை சிறந்த இயற்கையியலாளராகக் மேலும்
-கப்பலோட்டிச் சிறை சென்ற வ.உ.சி. வறிய நிலையிலிருந்தபோது அவருக்கு இந்தியத் தமிழர்கள் கைகொடுத்தார்க மேலும்
-நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய ப மேலும்
- காலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்தி மேலும்
-சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையால் தாக்கப்பட்டது, பாரதியின் இறுதிக்கால வாழ்வில மேலும்
-1921இல் காலமான பாரதியை நேரில் அறிந்த நண்பர்கள் அவரை நினைவுகூர்ந்து எழுதிய கட்டுரைகள் இவை. பாரதி மேலும்
-1921இல் பாரதி காலமான அடுத்த இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளில் அவருடைய கவிதையை மதிப்பிட்டுப் பல்வே மேலும்
வில்லியம் எஸ். பர்ரோஸ் 1991இல் எழுதிய இந்தக் குறுநாவல் கேப்டன் மிஷனின் கதையுடன் தொடங்குகிறது. அவன மேலும்
இந்தியப் புராண, இதிகாசங்களில் தனித்துவம் மிக்க பாத்திரங்களில் ஒருவன் கிருஷ்ணன்.
மானுட வட மேலும்
-சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார் மேலும்
-அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம்ப பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட மெய்யனுப மேலும்
-1921-1939 காலகட்டத்தில் வ.வே.சு. ஐயர், அ. மாதவையா. றாலி, பி.எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்யாணச மேலும்
-----நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
-பிளாஸ்டிக் மாசுபாடு என்பது உலகளாவிய பிரச்சினை. பிளாஸ்டிக் பொருட்கள் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும்தான் இம்மாசுபாட்டைக் குறைக்க நாம் எடுக்கக்கூடிய முதல் படி. பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, சுற்றுச்சூழலில் இதன் தாக்கம், இம்மாசுபாட்டால் உண்டாகும் சமூக, பொருளாதார, சுகாதார விளைவுகள், தீர்வுகள் ஆகியவற்றை அறிவியல்பூர்வமாக இந்த நூல் எடுத்துரைக்கிறது.
நம்முடைய அன்றாடப் பழக்கவழக்கங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் இம்மாசுபாட்டைக் குறைக்க முடியும் என இந்நூல் வலியுறுத்துகிறது. அதற்கான வழிகளையும் முன்வைக்கிறது.
பொதுமக்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர் இம்மாசுபாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்.
இந்நூல், பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த சர்வதேச ஆய்வறிக்கைகள், பிளாஸ்டிக் தொடர்பான நூல்கள், ஐபிசிசி, ஐநா நிறுவனங்களின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான மொழியில் தொகுக்கப்பட்டுள்ளது.
-தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கும் மா. கிருஷ்ணன் (1912-1996) தலை சிறந்த இயற்கையியலாளராகக் கருதப்படுகிறார். அறிவியல் நோக்கில் காட்டுயிர்கள் பற்றித் தமிழில் முதலில் எழுதியவர் கிருஷ்ணன்தான். காட்டுயிர்களைப் பல சிறப்பான கோட்டோவியங்களிலும் அவர் சித்தரித்திருக்கிறார். இவையெல்லாம் இங்கு முதன் முதலாக நூலாக்கம் பெறுகின்றன. பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் மா. கிருஷ்ணன் நாவலாசிரியர் அ. மாதவையாவின் மகன். தியடோர் பாஸ்கரன் திரைப்பட வரலாறு, கானுயிர் ஆகிய துறைகளில் முக்கியப் பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். இவை பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் பாஸ்கரன் எழுதியுள்ள கட்டுரைகள் ஆராய்ச்சி இதழ்களிலும் வெகுசன ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.
-காவேரி, காலந்தோறும் இலக்கியங் களில் இடம்பெற்று வந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது. “காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம்” என உணர்ந்து தெளிந்த ‘சிட்டி’ (பெ.கோ. சுந்தரராஜன்)யும் தி. ஜானகி ராமனும் இணைந்து எழுதிய இப் பணயக் கதை - காவேரிக் கரைக் காட்சிகளை, அவற்றின் பகைப்புலங்களை, காவேரி சார்ந்த வரலாற்றை, பண்பாட்டை, புகைப்படங்கள் கோட்டோவியங்களுடன் தருகிறது. நாற்பதாண்டுகளுக்குப் பிறகு இந்தச் செவ்வியல் பயணக் கதை புதிய பதிப்பாக இப்போது வெளிவந்துள்ளது.
-கப்பலோட்டிச் சிறை சென்ற வ.உ.சி. வறிய நிலையிலிருந்தபோது அவருக்கு இந்தியத் தமிழர்கள் கைகொடுத்தார்களோ இல்லையோ தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பேருதவி புரிந்தனர். காந்தி வழியாகவும் இந்தப் பொருளுதவி 1916இல் வந்துசேர்ந்தது. இதன் தொடர்பில் ஒரு விவாதம் பல காலமாக நிகழ்ந்துவந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், வ.உ.சி.க்குப் பணம் தராமல் காந்தி ஏமாற்றிவிட்டார் என்பதே அதன் சாரம். இதுவரை வெளிவராத வ.உ.சி. காந்தி கடிதப் போக்குவரத்தின் அடிப்படையில் இந்த விவாதத்திற்கு இந்நூல் முற்றுப்புள்ளி வைக்கிறது. தென்னாப்பிரிக்கத் தமிழரின் பின்புலம், அவர்களுக்கும் வ.உ.சி.க்குமான தொடர்பு ஆகியவற்றையும் இந்நூல் விவரிக்கிறது. வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மாளின் தனித்தன்மையான ஆளுமை முதல்முறையாகத் துலக்கம்பெறுகிறது.
உணர்ச்சிக் கொந்தளிப்பும் அறிவுசார் சுவாரசியமும் மிகுந்த இந்நூலை, வ.உ.சி. எழுதிய எட்டும் காந்தி எழுதிய பதினொன்றுமாக மொத்தம் பத்தொன்பது கடிதங்கள் அணிசெய்கின்றன.
-காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் முதன்மை ஆவணங்களாகத் திகழ்கின்றன. அரசியல், வணிகம், வாழ்வியல், சமயம், சமூகம் என பலதரப்பட்ட தகவல்களை இவை வெளிப்படுத்துகின்றன. இந்த நூல் 18ஆம் நூற்றாண்டில் மெட்ராஸ் நகர அமைப்பு, சமூக அமைப்பு, ஐரோப்பியரும் உள்நாட்டு மக்களும் இணைந்து வாழ்ந்த சூழல் போன்றவற்றை நேரடி ஆவணக் குறிப்புகளால் பதிவாக்கிப் படம்பிடித்துக் காட்டுகின்றது. மெட்ராஸ் நகரில் இன்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட காசு வகைகள், தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய செய்திகள், கடைவீதிகள், ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்திருந்த ஏராளமான தாவர வகைகள், ஐரோப்பியர் உணவுத் தயாரிப்பு, பல நாடுகளிலிருந்து மெட்ராஸுக்கு வந்த கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், உள்ளூர் மக்களைப்பற்றி ஐரோப்பியர் கொண்டிருந்த கருத்துக்கள் பற்றியும் பேசுகிறது.
பெஞ்சமின் சூல்ட்சேவின் குறிப்புகளை ஜெர்மன் மூல வடிவிலிருந்து சுபாஷிணி மொழிபெயர்த்து வழங்கியிருக்கின்றார். கூடுதலாக நூலில் வழங்கப்பட்டுள்ள இரண்டு வரைபடங்களும் சென்னையின் படிப்படியான வளர்ச்சியைக் காட்டுகின்றன. இன்றைய சென்னையின் ஆரம்பகால நகர உருவாக்கத்தையும் சூழலையும் அறிந்துகொள்ள இந்நூல் முதன்மைத் தரவுகளை முன்வைக்கின்றது.
Colonial European documents are the primary documents that help to understand the history of Tamil Nadu for the last 600 years. They reveal a wide range of information such as politics, business, life, religion and society. The book chronicles the urban life of Madras in the 18th century, its social structure, and the context in which Europeans and indigenous peoples lived together. It also talks about the types of coins used in Madras today 250 years ago, the news that water was bought for money, the shops, the abundance of plants in every home, the European food product, the goods imported on ships from many countries to Madras, and the ideas that Europeans had about the local people.
Subashini has translated Benjamin Schultz's notes from the German original. In addition, the two maps given in the book show the gradual development of Chennai. This book presents the primary data to know the early city formation and environment of present-day Chennai.
-ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஊக்கமூட்டும் சக்தியாக விளங்கினார். அவர் மறைந்த பிறகும் அவரது வாழ்க்கை மாணவர்களுக்கு உத்வேகமூட்டுகிறது. அவருடைய சாதனைகளையும் போராட்டங்களையும் கூறும் ‘அக்னிச் சிறகுகள்’ நூலை மாணவர்களை மனதில் கொண்டு சுருக்கமாகவும் எளிமை யாகவும் வழங்குகிறோம். இந்த மாணவர் பதிப்பு தமிழ் மாணவர்கள் அப்துல் கலாமை நன்கு அறியவும் அவருடைய வாழ்விலிருந்து ஊக்கம் பெறவும் உதவும்.
*
எங்கோ ஒரு மூலையில், வசதிகளற்ற சமூகப் பின்னணியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு குழந்தை என்னுடைய வாழ்க்கை எப்படி உருவானது என்பதைத் தெரிந்துகொண்டால் ஓரளவேனும் ஆறுதல் அடையக்கூடும். அத்தகைய குழந்தைகள் பின்தங்கிய நிலையிலிருந்தும் நிராசை நிலையிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ள இது உதவக்கூடும். இப்போது அவர்கள் எப்படியிருந் தாலும் இறைவன் தங்களோடு இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இறைவன் அவர்களுடன் இருக்கும்போது யார் அவர்களுக்கு எதிரியாக இருக்க முடியும்?
ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்
முன்னாள் குடியரசுத் தலைவர்
-எனது இசையுடன் நான் கொண்டுள்ள உறவு மிகவும் அந்தரங்க மானது. நான் பாடும் பாடல்களின் உட்பொருள் அனைத்தும் இந்து சமய மரபைச் சேர்ந்தவை என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. என்னுடைய அளவுகோல்களின் அடிப்படையில்தான் அவற்றோடு நான் உறவு கொள்கிறேன். ஒவ்வொரு பாட்டுக்கும், அது தியாகராஜருடையதாக இருந்தாலும் தீட்சிதருடையதாக இருந்தாலும், எனது வாழ்க்கையில் அதற்கான முக்கியத்துவம் உண்டு. இவற்றைப் பொதுவெளியில் பாடும்போது அவற்றைப் பாடுகிறேன் என்பதைத் தவிர வேறு நோக்கம் எதுவும் எனக்கில்லை. கேட்பவர்களிடம் அவை உணர்வலைகளை ஏற்படுத்தலாம்; ஏற்படுத்தாமலும் போகலாம். ஆனால் நான் பாடுவதன் மூலமாகவே சமயம் சார்ந்தோ, ஆன்மிகம் சார்ந்தோ குருபீடத்தில் அமர்ந்து கொள்வதை வெறுக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் சமயம் என்பது மிகுதியும் சமூக-அரசியல் அனுபவம் மட்டுமே. அதன் விளிம்புகளில் நின்றுகொண்டிருப்பதாகவே என்னால் உணர முடிகிறது. சமுதாயத்தோடு எனக்குள்ள முதன்மையான தொடர்பு எனது இசையின் மூலமாகத்தான்.
-நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை. ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூகம் உளவியலும் எனப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நாட்டார் தெய்வங்கள் ஒரு மக்கள் பண்பாட்டின் அடையாளமாக நிற்கின்றன. - முன்னுரையில் ச. தமிழ்ச்செல்வன்
- காலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல் இது. வேதங்கள், திருமணச் சடங்குகள், மந்திரங்கள், மத குருமார்கள் எப்படிப் பெண்ணை அடிமைத்தனம் எனும் ‘பாசிக்குட்டையில்’ பிணித்துவைத்திருக்கின்றனர் என்பதை ஆதாரங்களுடனும் அறச்சீற்றத்துடனும் முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. கற்பு குடும்பம் பத்தினிமை என அமைக்கப்பட்ட மரபுகளைக் கட்டுடைக்கும் பெண்ணிய ஆராய்ச்சி ஆயுதம்! The book is a social research starting from Indian history’s Religious texts moves through the Western researches Ambedhkar’s writings and current problems of women. It shows how the status of women has been made lesser than of men. How Vedas, Marriage rituals, chants and priests have captured women in the moss of slavery. It’s a feminist research weapon against the pre-built traditions of chaste family and virtuosity.
-சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையால் தாக்கப்பட்டது, பாரதியின் இறுதிக்கால வாழ்வில் முக்கிய நிகழ்வாகும். அச்சம்பவத்தின் தாக்கத்தில் ‘கோவில் யானை’ எனும் நாடகத்தைப் பாரதி எழுதினார். பாரதி நூலெதிலும் இடம்பெறாத இந்நாடகத்தைக் கண்டெடுத்து வழங்கும் இந்நூல் பாரதியியலில் புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது.
ஆ. இரா. வேங்கடாசலபதி
-தமிழில் பல்வேறு அம்சங்களைப் போலவே சுயசரிதை எழுத்திலும் பாரதி ஒரு முன்னோடி. உரைநடையிலும் கவிதையிலும் அவர் தனது வாழ்வைப் பதிவுசெய்துள்ளார். புனைவு வடிவில் எழுதிய (முற்றுப்பெறாத) ‘சின்னச் சங்கரன் கதை’யினையும் ‘கனவு’ என்ற கவிதை வடிவில் அமைந்த சுயசரிதையினையும் கவனப்படுத்துகிறது இந்நூல். ‘கனவு’ கழிவிரக்கம் மிகுந்த பிரதியாக உள்ளது. ‘சின்னச் சங்கரன் கதை’ தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்து நிற்கும் அற்புதமான நகைச்சுவை எழுத்தாக மிளிர்கிறது.
பாரதியியலுக்கு முக்கியப் பங்காற்றிவரும் ஆ.இரா.வேங்கடாசலபதி இவ்விரு பிரதிகளையும் தொகுத்தளித்து விரிவான முன்னுரையை எழுதியிருக்கிறார். இந்தப் பிரதிகளின் முக்கியத்துவத்தையும் அவற்றின் நுட்பங்களையும் இந்த நூலின் மூலம் உணரலாம்.
-1921இல் காலமான பாரதியை நேரில் அறிந்த நண்பர்கள் அவரை நினைவுகூர்ந்து எழுதிய கட்டுரைகள் இவை. பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபனின் பெருமுயற்சியில் உருவான அரிய தொகுப்பின் புதிய பதிப்பு இது. பாரதி என்ற ஆளுமையை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் இன்றியமையாத துணைநூல் இது.
-1921இல் பாரதி காலமான அடுத்த இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளில் அவருடைய கவிதையை மதிப்பிட்டுப் பல்வேறு அறிஞர்கள் எழுதிய கிடைத்தற்கரிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபன் அவர்களின் முயற்சியில் உருவான அரிய தொகுப்பின் புதிய பதிப்பு இது. The book is a collection of articles about Bharathi’s poetry, written on the three decades after his death in 1921. One of the greatest poets of Tamil, the books presents how bharathi was understood in the last period of Pre-Independance India. The rare collection was a result of Bharathi Expert R.A.Pathmanaban’s hard work. The book is republished for new readers to understand Bharathi better.
வில்லியம் எஸ். பர்ரோஸ் 1991இல் எழுதிய இந்தக் குறுநாவல் கேப்டன் மிஷனின் கதையுடன் தொடங்குகிறது. அவனது அனுபவங்கள், அத்தீவு சுற்றுச்சூழல் பன்மையத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் வந்தேறிகளின் வாழ்க்கை என்று நகர்ந்து, கொள்ளை நோய்கள், மருத்துவம் என்று வெவ்வேறு கதைத் (துண்டு) தளங்களுக்கிடையே ஊடாடுகிறது.
இந்தக் கதைத்துண்டுகளின் தளம் பரந்தது. காலனியாதிக்கம், பூர்வகுடிகளின் வாழ்வாதாரங்கள், சுற்றுச்சூழல் பன்மைய அழிவு, கொள்ளைநோய்களின் தோற்றம், அவற்றுக்கான மருத்துவம், அதன் பின்னாலுள்ள அரசியல், மதங்களால் பீடிக்கப்பட்ட சமூகத்தின் கையறுநிலை என்று உலகளாவிய பிரச்சினைகளிலிருந்து தன் கதைக்கான துண்டுகளைத் தெரிவு செய்கிறது இக்குறுநாவல். அத்தனை துண்டுகளும் பிரதிபலிப்பது இவையனைத்தும் நிறைந்த நிஜத்தையும், அதைக் கண்டும் காணாமல் கடந்துபோகும் நம் வாழ்வின் நிதர்சனத்தையும்.
பொய்யுரு நாம் பார்க்கத் தவறும் பிரச்சினைகளைப் பரப்பிவைத்து நமது பார்வையை மாற்ற முயல்கிறது.
-இசை, நடனம், நாடகம் போன்ற பாரம்பரிய நிகழ்கலைகள் போலல்லாமல், சினிமா முற்றிலும் தொழில்நுட்பத்தை சார்ந்த ஒன்று. அது மட்டுமல்ல இவைகளுள் மிகவும் இளையதும் சினிமாதான். ஆனால் ஆரம்பமுதல் அரசும், அறிவுலகமும், கல்விப்புலமும் இதை உதாசீனம் செய்ததால் அதன் சிறப்பு இயல்புகள் சரியாக கவனிக்கப்படவில்லை. ஒரு சீரிய கலை வடிவம் ஒரு பொழுதுபோக்கு சாதனமாக உறைந்து விட்டது.இந்த தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தமிழ்சினிமாவின் சில பரிமாணங்களை அவதானிக்கின்றன. அத்துடன், மௌன யுகத்தின் நிர்ப்பந்தங்கள் எவ்வாறு தமிழ்த்திரையின் அம்சங்களை உருவாக்கின? பாட்டு, நடனம் நம் திரைப்படங்களில் பிரதானமாக இடம் பெற்றது எப்படி, இந்திய, தமிழக வரலாறு ஒரு திரைக்கதைச் சுரங்கம் போன்றிருந்தாலும் வெகு சில வரலாற்றுப்படங்களே தமிழில் உருவாக்கம் பெற்றிருப்பது ஏன் போன்ற கேள்விகளையும் இந்நூல் எழுப்புகின்றது.இன்று அழகியலிலும், வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தமிழ்சினிமாவில் ஒரு புத்தாக்கம் தெரிகின்றது. சில இயக்குநர்கள் சினிமா மொழியை கையாளுவதிலும், கதை சொல்லல் முறையிலும் ஒரு மேம்பாட்டை பதிவு செய்துள்ளனர். ஆயினும் ஒரு சமுகத்தின் சினிமாவிற்கு இயக்குநர், தயாரிப்பாளர் மட்டும் பொறுப்பல்லர். திரைபற்றி எழுதுபவர்கள், படிப்பவர்கள், சிந்திப்பவர்கள் இவர்களுக்கும் பொறுப்பிருக்கின்றது என்பது இந்நூலாசிரியரின் நம்பிக்கை.
இந்தியப் புராண, இதிகாசங்களில் தனித்துவம் மிக்க பாத்திரங்களில் ஒருவன் கிருஷ்ணன்.
மானுட வடிவம் எடுத்த நிலையிலும் பெரும்பாலும் தெய்வமாகவே செயல்பட்டவன். எனினும் மானுடப் பண்புகளான காதல், நட்பு முதலானவற்றை வெளிப்படுத்தியவன். இவற்றையும் தாண்டி, தத்துவம், இசை எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவன்.
வண்ணமயமான பன்முக ஆளுமையாக விளங்கும் கிருஷ்ணனை மையமாகக் கொண்டு இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல் இது. கிருஷ்ணனைச் சமகாலப் பின்னணியில் வைத்துக் காணும் அணுகுமுறையே இந்த நாவலின் தனித்தன்மை.
-சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்டதில்லை. சாதி ஆதிக்கத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் பதிவாகியுள்ளன. குற்றச்சாட்டுகளைப் போலவே, சாதி மனோபாவம் கொண்டிருந்த காரணத்தாலும் அதற்குத் துணைபோன காரணத்தாலும் உண்டான குற்றவுணர்ச்சிகளும் ஏக்கங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. சமாதானம் காணும் கட்டுரைகளும் நியாயம் கற்பிக்கும் கட்டுரைகளும் உள்ளன. கூச்சத்தால் அல்லது அச்சத்தால் தன்மையைப் படர்க்கையாக்கிப் பதுங்கிக்கொண்ட பதிவுகளும் உண்டு. ஒப்புதல் வாக்குமூலங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. சுய வரலாற்றுத் தன்மை மிகுந்தவையும் உள்ளன. எழுதுவதற்குப் பூரண சுதந்திரம் கொடுத்தும் சாதி ஆதரவுக் குரல் எந்தக் கட்டுரையிலும் வெளிப்படவில்லை என்பது எனக்குப் பெரிய ஆறுதலாக இருக்கிறது. எதிர்காலம் பற்றிய குறைந்தபட்ச நம்பிக்கையைத் தருகிறது.
-அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம்ப பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட மெய்யனுபவங்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கிறது.’
-அருந்ததி ராய் முன்னுரையிலிருந்து
Annihilation of Caste: The Annotated Critical Edition Annihilation of Caste is an audacious denunciation of Hinduism and its caste system. In 1936, a Hindu reformist group invited Dr. B.R. Ambedkar to deliver its annual lecture. When it read an advance copy of the text of the speech, the group found the contents "unbearable" and rescinded its invitation. Ambedkar published the text on his own. It offers a scholarly critique of the Vedas and shastras-scriptures the Hindus regard as sacred, scriptures that sanction the worlds most hierarchical and iniquitous social system. The worlds best known Hindu, Mahatma Gandhi, responded to the provocation. The hatchet was never buried.
This extensively annotated edition of Annihilation of Caste is introduced by Arundhati Roy. Her introduction, The Doctor and the Saint, looks at the ways in which caste plays out in modern India and how the conflict between Ambedkar and Gandhi continues to resonate into the present day. It takes us to the beginning of Gandhi's political career in South Africa, where his views on race, caste and imperialism were shaped. It tracks Ambedkars emergence as a major political figure in the national movement and shows how his scholarship and intelligence illuminated a political struggle beset by sectarianism and obscurantism. Roy breathes new life into Ambedkars anticaste utopia and says that without a Dalit revolution, there cannot be any other in India. The book is translated into tamil by Poet and writer Prema Revathi.
-1921-1939 காலகட்டத்தில் வ.வே.சு. ஐயர், அ. மாதவையா. றாலி, பி.எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்யாணசுந்தரம், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, சங்கு ஸுப்ரமண்யன், புதுமைப்பித்தன், பெ.கோ.சுந்தரராஜன், ந. சிதம்பரசுப்ரமண்யன், தி.ஜ.ர. மௌனி, லா.ச. ராமாமிர்தம் ஆகிய கதாசிரியர்கள் எழுதிய புதுமையான உருவ – உள்ளடக்கங்களைக் கொண்ட சிறுகதைகளைக் கால வரிசைப்படி எடுத்துக்கொண்டு, சிறுகதைகளைக் கால வரிசைப்படி எடுத்துக்கொண்டு, சிறுகதை வளர்ச்சியில் அவற்றின் பங்களிப்பு என்ன, நிறைகுறைகள் என்ன என்பவற்றை விரிவாக ஆராய்கிறது ‘தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.’ இலக்கிய வாசகர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயனுடைய விமர்சன நூல்.