Your cart is empty.
இந்நாவலில் வரும் பெண்கள் கணவனால் கைவிடப்பட்டவர்கள்; பொறுப்பற்ற கணவனைக் கொண்டவர்கள்; கணவனை இழந்தவர்கள்; குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் சுமப்பவர்கள்.
அண்டிப் பருப்பு என்னும் முந்திரிப் பருப்பைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கன்னியாகுமரியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளன. கடுமையான பணிச்சுமையும் மோசமான பணிச்சூழலும் கொண்ட இந்தத் தொழிலகங்கள்தான் திக்கற்ற பல பெண்களுக்கான வாழ்வாதாரம். பணியில் உள்ள கஷ்டங்கள் ஒருபுறம் இருக்க இங்கே வேலை செய்பவர்களைச் சமூகம் இழிவாகப் பார்க்கிறது.
துயரங்களையும் களங்கங்களையும் சுமந்தபடி வாழும் இத்தகைய பெண்களில் ஒருத்திதான் ஓமனாள். ஓமனாளைப் பின்தொடரும் கதையாடல் அவளைப் போன்ற பிற பெண்களையும், சுமையாக அவர்கள் வாழ்வில் கவிந்திருக்கும் ஆண்களையும், கண்ணுக்குத் தெரியாத விலங்காகப் பற்றியிருக்கும் சமூகச் சூழலையும் அழுத்தமாகச் சித்தரிக்கிறது.
கழற்ற முடியாத விலங்குகளுக்கும் அரிதான விடுதலை வாய்ப்புகளுக்கும் இடையே அல்லாடும் பெண்களின் வாழ்க்கையை உயிரோட்டத்துடன் கண்முன் நிறுத்துகிறார் மலர்வதி. துல்லியமான வட்டார வழக்கும் சூழல் சித்தரிப்பும் இந்நாவலை யதார்த்தச் சித்திரமாக ஆக்குகின்றன.
ISBN : 9789355235237
PAGES : 240