Your cart is empty.
மனித வாழ்வில் வளர்ப்பு விலங்குகள் பெறும் இடத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இவ்வகையில் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார் பெருமாள்முருகன். கடந்த ஆண்டு வந்த ‘வேல்!’ தொகுப்பைத் தொடர்ந்து இது வெளியாகிறது. நாய், பூனை ஆகியவற்றை வீட்டில் வைத்து வளர்க்கும் சூழலில் அவற்றின் மூலமாக வெளிப்படும் சாதி, பாலின வேறுபாடுகளையும் உடைமை உணர்வையும் இக்கதைகள் நுட்பமாகக் காட்டுகின்றன. பல கதைகள் சம்பவ வலுப் பெற்றவை. மனிதருக்கு விலங்குக் குணம் ஏறுகிறது; விலங்குகளுக்கு மனிதக் குணம் ஏறுகிறது. இந்தப் பரிமாற்றக் களங்களை இக்கதைகள் நம்பகத்தன்மையுடன் சித்திரித்துள்ளன. சுதந்திரமான சொல்முறையும் நிதானமான விவரணையும் கொண்டு நெஞ்சை நெகிழ்த்தும் மொழியில் எழுதப்பட்டுள்ள கதைகள் இவை.
ISBN : 9789361102776
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 230.0 grams
மோகனா (வல்லினம்.காம் வலைதளத்திலிருந்து)
1 Nov 2025
பெருமாள்முருகனின் ‘போண்டு’ சிறுகதை நூல்: ஒரு பார்வை
…பெருமாள் முருகனின் ‘வேல்’ எனும் சிறுகதை தொகுப்பைத் தொடர்ந்து, ‘போண்டு’ பதினொன்று சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக வெளியாகி உள்ளது. வளர்ப்பு பிராணிகளை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தாலும் அதை வளர்க்கும் மனித விலங்கினைப் பற்றிய கதைகளாகவே என்னால் இக்கதைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது...
…‘போண்டு’ தொகுப்பு, மனிதனின் அன்பு என்ற எளிய சொல் எவ்வளவு பல அடுக்குகளைக் கொண்டது என்பதை நமக்குக் காட்டுகின்றன. அன்பு எப்போதும் பரிசுத்தமானது அல்ல, அது பயத்தையும், உடைமையையும், பாதுகாப்பின் பேராசையையும் உடன் சுமந்து வருகிறது. மனிதன் செல்லப் பிராணியை நேசிக்கிறான் என்ற உண்மை, அதே நேரத்தில் அதைக் கட்டுப்படுத்த விரும்புகிறான் என்ற உண்மையையும் மறைக்கவில்லை. அன்பு, ஒன்றை உடைமையாக்குவதல்ல; அவற்றைப் புரிந்து கொள்வதற்கான முயற்சி. ஆனால் பெரும்பாலான மனித அன்பு இன்னும் அந்த அடியெடுப்பைத் தொடங்கவில்லை.
நன்றி: மோகனா (வல்லினம்.காம் வலைதளத்திலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://vallinam.com.my/version2/?p=10633&sfnsn=wiwspmo...














