Your cart is empty.
-உலக கலைப் பாரம்பரியத்தின் ஒரு சிறப்பு பரிமாணம் பெற்றவை சோழர் செப்புச்சிலைகள். பன்னாட்டளவில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் எல்லாவற்றிலும் இவை ஓரிரண்டாவது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்நூல் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்த செப்புப் படிமங்களை குவிமையமாக வைத்துப் பேசுவதுடன், மற்ற இடங்களிலுள்ள கலையழகு மிக்க சில செப்புப் படைப்புகளையும் கவனிக்கின்றது. இந்த திருமேனிகளை உருவாக்கும் முறை, ஆலய மரபொழுக்கத்தில் அவற்றின் இடம், உருவநியதிகள் இவற்றைப் பற்றியும் இந்நூல் விவரிக்கின்றது. சோழ மன்னர்கள் வென்ற போர்கள், எழுப்பிய ஆலயங்கள், கொடுத்த நல்கைகள் இவற்றின் பின்புலத்தில் செப்புப் படிமங்களின் தோற்றம் பற்றி இந்நூல் ஆராய்கின்றது. கலை வரலாற்றில் அடிக்கடி எழுப்பப்படும் “சோழர்களுக்கு பின்னர் இந்தச் சிலைகள் என்னவாயின?” என்ற கேள்வியையும் இந்நூல் எதிர்கொள்கின்றது. தென்னிந்திய வரலாற்றுப் பின்னணியில் இந்தப் புதிருக்கு விடை தேடும் நூலாசிரியர் அவை அழிக்கப்படவில்லை, வெவ்வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன என்கிறார். அதே மூச்சில் அண்மையில் அகமதாபாதிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட இரு செப்புச்சிலைகளின் அடையாளத்தைப் பற்றி அடிப்படையான சில கேள்விகளை எழுப்புகின்றார்.
ISBN : 9789390802272
PAGES : 0













