Your cart is empty.
-உயிர் வாழ்வதற்காக மட்டும் உணவு என்பதை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உணவுப் பழக்கம் வட்டாரம், பண்பாடு, விழா, சடங்கு, வழிபாடு, விரதம் எனப் பண்பாட்டுக் கூறுகளைச் சார்ந்தது. பழமையான பண்பாடும் வரலாறும் கொண்ட நாஞ்சில் நாட்டு உணவுப் பழக்கங்களை நாஞ்சில் நாடன் முதல் முறையாகத் தொகுத்திருக்கிறார். இது நீண்டகாலச் சேகரிப்பு. ஒரு படைப்பாளி இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது சவாலான விஷயம். இது சமையல் புத்தகம் அல்ல. ஆனால் சமையல் பக்குவத்தையும் சொல்கிறது. உணவின் மூலம் தாக்கம் செலுத்தும் பண்பாட்டுச் சிதறல்கள் இதில் உள்ளன. பானம், சோறு, பலகாரம், குழம்பு, பாயசம், மாமிச உணவு என வகுத்துக்கொண்டு, அவற்றின் பண்பாட்டு விஷயங்களைப் படைப்பாளிக்குரிய மொழிநடையில் சொல்கிறார். தமிழில் இந்த வகையில் இதுதான் முதல் ஆக்கம்.
ISBN : 9789361106309
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 545.0 grams
சித்ரா பாலசுப்ரமணியன்
10 Nov 2025
நாஞ்சில் நாட்டு உணவு – நாஞ்சில் நாடன் மதிப்புரை
உணவைப் போலவே உணவைப் பற்றிய புத்தகங்களும் வெகு சுவாரஸ்யமானவையே…
…உணவைப் பற்றி எழுதும் போது பழைய நினைவேக்கம் இல்லாமல் எழுத முடிவதில்லை.
ஒவ்வொரு வட்டாரத்திற்குமான உணவின் வகைகள் தொகுக்கப்பட வேண்டியது மிக அவசியம்.
இந்தப் புத்தகம் காலச்சுவடு வெளியீடு.
நன்றி: சித்ரா பாலசுப்ரமணியன்
முழுப்பதிவையும் வாசிக்க:
ஓவியர் ஜீவா
16 Nov 2025
கல்பனா ரத்தன் (முகநூலிலிருந்து)
21 Apr 2026
நாஞ்சில் நாடனின் ’நாஞ்சில் நாட்டு உணவு’ கட்டுரைகள்
நூல் பரிந்துரை
"பிட்சா, பர்கர் தலைமுறையே... 'நெய் மீன்' பத்தியும் 'கரைச்ச புளி' பத்தியும் உங்களுக்குத் தெரியுமா?"
…நாஞ்சில் நாட்டுக்கே என்று பிரத்தியேகமாகக் கிடைக்கும் உணவுப் பொருள்களையும் உணவு வகைகளையும் சுவையாக விவரித்துள்ளார் நாஞ்சில் நாடன். அவர் எழுதியவற்றில் இன்று பாதிக்கு மேல் இப்போது பழக்கத்தில் இல்லை. இன்றைய தலைமுறையினருக்கு இதெல்லாம் வியப்பாகத் தோன்றலாம். அவர்கள் கேள்விப்பட்டேயிராத விஷயங்கள் நிறைய…
…நாஞ்சில் நாட்டில் விளையும் விளைபொருட்களுடன், அங்குள்ள மீன் வகைகள், பாத்திரங்களின் பெயர்கள் சமையல் தொடர்பான கலைச்சொற்கள் எல்லாம் கலந்த பிரம்மாண்ட தொகுப்பு இந்நூல். அதற்கான அவரது கடின உழைப்பும் மெனக்கிடலும் பக்கத்துக்கு பக்கம் தெரிகின்றன…
நாஞ்சில் நாட்டின் உணவு பற்றிய கையேடாகவும், உணவுடன் பின்னிப் பிணைந்த அந்தக் கால மக்களின் வாழ்வியலையும் வரலாற்று ஆவணமாகவும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நாஞ்சில் நாடன்.
உணவுப் பிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு!
நன்றி: கல்பனா ரத்தன் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் பார்க்க:
https://www.facebook.com/photo/?fbid=26575492045445885&set=gm.2414275885738723&idorvanity=437996733366658



