Your cart is empty.


நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
-ஈழத்தமிழ் எழுத்தாளரான சாந்தன், தான் பார்த்த திரைப்படங்கள், பயணித்த … மேலும்
-ஈழத்தமிழ் எழுத்தாளரான சாந்தன், தான் பார்த்த திரைப்படங்கள், பயணித்த தேசங்கள், படித்த நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள், தேடியலைந்த பழைய புத்தகக் கடைகள் ஆகியவற்றைப் பற்றி இந்த நூலில் பகிர்ந்துகொள்கிறார்.
அனுபவங்களைச் சொல்லும்போது சாந்தனுக்குள் இருக்கும் தேர்ந்த கதைசொல்லியின் இயல்பு வெளிப்படுவதால் இந்தக் கட்டுரைகள் புனைகதைகளைப் படிப்பதற்கு ஒப்பான அனுபவத்தைத் தருகின்றன. எதைப் பற்றி எழுதினாலும் சுருக்கமாகவும் வசீகரமாகவும் எழுதும் திறன் சாந்தனுக்குக் கைகூடியிருக்கிறது. பரபரப்பற்ற நிதானமான மொழியைக் கொண்டிருக்கும் இக்கட்டுரைகள் வாசிப்பவர்மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
ISBN : 9789361105562
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 125.0 grams