Your cart is empty.
தங்க நகைப் பாதை
-இருவழிச்சாலை நான்காகி, ஆறாகி, பின் அதிநவீனச் சாலையாக … மேலும்
இந்த புத்தகத்தின் இ-புத்தக பதிப்பை வாங்க
இ-புத்தகம் விலை : ₹ 330.00
-இருவழிச்சாலை நான்காகி, ஆறாகி, பின் அதிநவீனச் சாலையாக மாறும்போது மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களே மு. குலசேகரனின் ‘தங்கநகைப் பாதை’ நாவலின் மையம்.
அசாதாரணமான மனிதர்கள், நம்ப முடியாத நிகழ்வுகள், சாத்தியமற்ற செயல்கள் ஆகியவற்றால் நிரம்பியது இந்த நாவல். கற்பனை விதைப்பு, பொம்மைக் காவல், மிகை அறுவடை, பேய் உழைப்பு, தோல் குவியல் போன்றவை அதீதப் புனைவுச் சித்திரங்களாக உருப்பெறுகின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பாத்திரத்தின் மூலம் வெளிப்படுவது நாவலுக்குப் பன்முகப் பார்வையைத் தருகிறது.
நெடுஞ்சாலை விபத்தில் கணவனை இழந்திருந்த பேச்சிக்கிழவி “அழிவுக்காலம் ஆரம்பமாயிருச்சி” என்கிறார். இந்த வாக்கு உக்கிரம் பெற்று நாவலை வளர்த்துச் செல்கிறது.
எளிமையானதாகத் தோற்றமளிக்கும் குலசேகரனின் தெளிந்த கவித்துவ மொழி நுணுக்கமும் உருவகத்தன்மையும் கூர்மையும் கொண்டது. நவீன வாழ்வின் மறுபக்கம் குறித்த புனைவுகளில் முக்கியமான இடம்பெறத் தக்க நாவல் இது.
ISBN : 9789361100338
SIZE : 14.0 X 1.5 X 21.0 cm
WEIGHT : 415.0 grams
M Kulasekaran
14 Oct 2025
வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுமம்
12 Jul 2025
மு. குலசேகரனின் ‘தங்க நகைப் பாதை’ நாவல் பற்றிய பார்வை
“இருவழிச்சாலை நான்காகி, ஆறாகி பின் அதிநவீன சாலையாக மாறும் போது சுற்றியுள்ள மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி இந்நாவல் விவரிக்கிறது.”
- கோமதி சுரேஷ் (முகநூல் பதிவு)
https://www.facebook.com/share/p/16PiEeE4Pn/
Guna Kandasamy (முகநூல் பதிவு)
6 Mar 2025
மு . குலசேகரனின் ““தங்க நகைப் பாதை” நூலைப் பற்றிய பார்வை:
அசலான தமிழ் வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கும் மிக முக்கியமான நாவலாக தங்க நகைப் பாதை வந்திருக்கிறது. சமீபத்தில் வெளிவந்து வாசித்த நாவல்களில் எழுத்துப்பிழைகள் இல்லாமலிருந்த முதல் நூல் இதுதான் என்பதையும் குறிப்பிடவேண்டும். தங்க நாற்கரச் சாலை என்று தலைப்பிடாமல் தங்க நகைப் பாதை என்று வைத்ததின் நுட்பம் முக்கியமானது.
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/share/p/1A1bD8Zpmj/?mibextid=wwXIfr
எம். பாஸ்கர்
30 Oct 2025
நாவல் விமர்சனம்
“இந்நாவலின் சிறப்பு என்பது யதார்த்தமான ஏராளமான கதாபாத்திரங்கள். பேச்சிக்கிழவி ஒரு குறிசொல்லிபோல வரவிருக்கும் காலத்தைப் பற்றிய அச்சத்துடன் சுந்தரத்தின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறாள். ஒரு சாலை, சாலையோரமிருக்கும் ஒரு பாத்திரக்கடையின் பாத்திரங்களில் எல்லாம் விதவிதமாகத் தெரிவதுபோல ஒரே சமூகநிகழ்வு நாகேந்திரன், சுமதி, விஜயா என்று ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒவ்வொரு வகையாக நிகழ்வதை நுணுக்கமாகவும் சில இடங்களில் உணர்ச்சிமோதல்கள் வழியாகவும் அவ்வப்போது அதீத நிகழ்வுகள் வழியாகவும் குலசேகரன் சொல்லிச் செல்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு அத்தியாயத்தின் மையமாக ஆகிறது. நாமே ஒரு கிராமத்தில் மெய்யாக வாழ்ந்து அத்தனைபேரையும் சந்தித்து அவர்களிடம் கதைகேட்டு வந்ததுபோன்ற உணர்வை இந்நாவல் உருவாக்குகிறது.”
- எம். பாஸ்கர்
நன்றி: https://www.jeyamohan.in/224397/














