Your cart is empty.
அரூப நெருப்பு
எட்டுச் சிறுகதைகள் கொண்ட ‘அரூப நெருப்பு’ கே.என். செந்திலின் இரண்டாவது தொகுப்பு. வாழ்வின் தீவிர நிலைகளுக்கு இணையான நிலைகளையே தன் கதைகளில் உருவாக்க எத்தனிக்கிறார் செந்தில். வாழ்வைப் … மேலும்
எட்டுச் சிறுகதைகள் கொண்ட ‘அரூப நெருப்பு’ கே.என். செந்திலின் இரண்டாவது தொகுப்பு. வாழ்வின் தீவிர நிலைகளுக்கு இணையான நிலைகளையே தன் கதைகளில் உருவாக்க எத்தனிக்கிறார் செந்தில். வாழ்வைப் பற்றிய தனித்த சஞ்சாரத்தின் மூலம் தன் எழுத்தை உருவாக்க விரும்பும் இவரது கதைகளின் மனிதர்கள் பசியாலும் காமத்தாலும் பழி உணர்வாலும் தந்திரத்தாலும் உன்மத்தத்தாலும் மரணத்தாலும் வதைப்பவர்கள், வதைபடுபவர்களும் கூட. இந்த இருண்ட உலகை எந்த மனச் சாய்வுமின்றி ‘அராஜகமாக’ச் சித்திரிப்பதில் கே.என். செந்தில் பெற்றிருக்கும் வெற்றிக்குச் சான்று இக்கதைகள்.
கே.என். செந்தில்
கே.என். செந்தில் (பி. 1982) பெற்றோர்: நடராஜன் - கண்ணம்மாள். சொந்த ஊர் அவிநாசி. மேலாண்மையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார். திருப்பூரில் வரி ஆலோசனை அலுவலகம் நடத்துகிறார். சிறுகதைத் தொகுப்புகள் ‘இரவுக் காட்சி’ (2009), ‘அரூப நெருப்பு’ (2013) ஆகியன. ‘விழித்திருப்பவனின் கனவு’ (2016) முதல் கட்டுரைத் தொகுப்பு. இளம் படைப்பாளிக்கான ஸ்பாரோ விருதை 2014இலும் சுந்தர ராமசாமி விருதை 2016இலும் பெற்றிருக்கிறார். கபாடபுரம் என்னும் இணைய இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். தொடர்புக்கு: 92, முனியப்பன் கோவில் வீதி, அவிநாசி. கைபேசி: 9750344855 மின்னஞ்சல்: knsenthilavn7@gmail.com
ISBN : 9789381969977
SIZE : 14.1 X 7.0 X 21.3 cm
WEIGHT : 195.0 grams