Your cart is empty.
ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்
‘1911 ஜூன் 17. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் மணியாச்சி மெயில் நின்றுகொண்டிருந்தது’ என்னும் வாக்கியத்துடன் ஆரம்பமாகும் நூல் அதன்பின் நிகழும் … மேலும்
‘1911 ஜூன் 17. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் மணியாச்சி மெயில் நின்றுகொண்டிருந்தது’ என்னும் வாக்கியத்துடன் ஆரம்பமாகும் நூல் அதன்பின் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் ஒரு திரைப்படம் நம் முன் ஓடுவதுபோல் கண்முன் கொண்டுவருகிறது. ஆஷின் கொலை, வாஞ்சியின் தற்கொலை, ஆஷ் துரையின் பின்னணி, தொடர்ந்து நிகழும் போலீஸ் வேட்டைகள், இந்தியப் புரட்சி இயக்கத்தின் பின்னணி, இப்பின்னணிக்கும் ஆஷ் கொலைக்கும் இருந்த உறவுகள் ஆகியவற்றைப் படிப்படியாக விவரித்துக்கொண்டு போகிறார் ஆசிரியர். இவ்விவரிப்பு, பெரும் நிகழ்வுகளைச் சார்ந்தும் சரி, மிகச் சிறிய நிகழ்வுகளைச் சார்ந்தும் சரி அசைக்க முடியாத சரித்திர ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இங்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சரித்திரச் சான்றுகளைச் சார்ந்த புனர்நிர்மாணம் என்ற அறிவுலக ஒழுக்கத்திற்கு இது ஒரு அபூர்வமான உதாரணம். முன் னெண்ணங்களிலிருந்து முற்றாகப் பெற்ற விடுதலையும் விஞ்ஞானரீதியான ஆராய்ச்சியில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்ட உதாரணம்.
ISBN : 9788189945923
SIZE : 13.9 X 0.7 X 21.4 cm
WEIGHT : 189.0 grams