Your cart is empty.
ஆ. சிவசுப்பிரமணியன்
பிறப்பு: 1943
ஆ. சிவசுப்பிரமணியன் (பி. 1943) பொருள்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான ஓர் அறிவுப் புலம் ‘பொருள்சார் பண்பாடு’. இத்துறை சார்ந்து நின்று, பனை மரம் என்ற பயன்மிகு மரம் குறித்த ஆய்வே இந்நூல். தமிழர்களின் சமூக வாழ்வில் பனை மரம் வகிக்கும் இடத்தை வரலாறு, கல்வெட்டு, இலக்கியம், இலக்கணம், சமய ஆய்வியல் எனப் பல்வேறு அறிவுத் துறைகளின் துணையுடன் இந்நூல் ஆராய்கிறது. இதன் வழியாகத் தமிழ்ச் சமூக வரலாற்றின் ஒரு பகுதியை அறிமுகம் செய்யும் நூலாகவும் இந்நூல் விரிகிறது. ஆ. சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் முக்கியச் சமூக விஞ்ஞானிகளுள் ஒருவர். தூத்துக்குடி நகரில் வாழ்ந்துவரும் இவர் நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் வரலாறு ஆகிய துறைகளில் பல நூல்கள் எழுதியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்வதிலும் ஆர்வம்கொண்டவர். பேராசிரியர் நா. வானமாமலையின் மாணவர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
வரலாறும் வழக்காறும் (இ-புத்தகம்)
வரலாற்றை அறிவதற்கான ஆகிவந்த முறைகளைத் தாண்டிச் செல்கிறது ஆ. சிவசுப்பிரமணியனின் இந்த நூல். மக்களிட மேலும்
ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் (இ-புத்தகம்)
-அகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்க மேலும்












