Your cart is empty.
அயோத்திதாசர் : வாழும் பௌத்தம்
ஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆய்வுவெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நவீனகால தமிழ்ச் சிந்தனைகள்மீதும் செயல்பாடுகள்மீதும் மரபின் வேரிலிருந்து … மேலும்
ஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆய்வுவெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நவீனகால தமிழ்ச் சிந்தனைகள்மீதும் செயல்பாடுகள்மீதும் மரபின் வேரிலிருந்து எழுந்துவந்து வினையாற்றிய அயோத்திதாசர் எனும் அரிய மூலிகைச்செடியை ஒத்த சிந்தனையாளர்கள் பற்றிய தனித்துவமான அவதானங்களை உரையாடல்களின்வழியே கண்டடைகிறது இத்தொகுப்பு. நவீன மனப்பாங்கால் கண்டறிய முடியாத கோணங்களை அவற்றின் மறைவிலிருந்து விலக்கி, விரிந்த பின்புலத்தில் வைத்துப் பேசிய அயோத்திதாசரை அவர் காலத்திலிருந்தும் சமகாலத்திலிருந்தும் மதிப்பிடுகிறது இத்தொகுப்பின் கட்டுரைகள். அயோத்திதாசர் என்னும் முழுமையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு அவை உருவானவிதம், அவர் ஒன்றை புரிந்துகொண்ட & விளக்கியமுறை,அவற்றின் சமகாலப் பொருத்தம் ஆகியவற்றையும் கட்டுரைகளில் முன்வைக்கிறார் ஸ்டாலின். முதன்முறையாக இதுவரை அயோத்திதாசர் சார்ந்து பதிவுகளிலிருந்து கவனம்பெறாத தரவுகளைத் திரட்டி எழுதப்பட்டிருப்பதும் இத்தொகுப்பின் தனித்துவம்.
ISBN : 9789352440177
SIZE : 13.9 X 0.9 X 21.5 cm
WEIGHT : 219.0 grams