Your cart is empty.
அழைப்பு
50 ஆண்டுகளுக்கு மேல் எழுதிவந்த சுந்தர ராமசாமி தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வந்திருக்கிறார். கதைகளின் பேசுபொருள், மொழிநடை, கதைகூறும் உத்திகள், வடிவம் எனப் புனைகதைகளின் அனைத்து அம்சங்களிலும் … மேலும்
50 ஆண்டுகளுக்கு மேல் எழுதிவந்த சுந்தர ராமசாமி தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வந்திருக்கிறார். கதைகளின் பேசுபொருள், மொழிநடை, கதைகூறும் உத்திகள், வடிவம் எனப் புனைகதைகளின் அனைத்து அம்சங்களிலும் தொடர்ந்து பரிசோதனைகள் செய்து வந்தவர் சு.ரா. 1970களின் இறுதியில் அவருடைய சிறுகதைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்தது. அவருடைய கதைக் களங்களும் மொழியும் வடிவமும் மாறின. கதைகளினூடே மேற்கொள்ளும் பயணத்தின் பரப்பு விரிவடைந்தது. நுட்பங்களும் அடுக்குகளும் கூடின. இந்த மாற்றத்தின் சாட்சியமாய் இருப்பவை இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள். தமிழ்ச் சிறுகதைகளிள் வளர்ச்சிப் போக்கில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய அந்தக் காலகட்டத்தின் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.
ISBN : 9788187477587
SIZE : 14.1 X 1.0 X 21.5 cm
WEIGHT : 252.0 grams














