Your cart is empty.
பூமியெங்கும் பூரணியின் நிழல்
இயல்பான சித்தரிப்புமொழியும் தாண்டித் தாண்டிச் செல்கிற வேகமான அளவான எள்ளலும் பொருத்தமான உரையாடல் மொழியும் குமாரநந்தனின் சிறுகதைகளின் வலிமையான அம்சங்கள். கிராமங்களும் நகரங்களும் கதைகளுக்குரிய பின்னணிகளாக மாறிமாறி … மேலும்
இயல்பான சித்தரிப்புமொழியும் தாண்டித் தாண்டிச் செல்கிற வேகமான அளவான எள்ளலும் பொருத்தமான உரையாடல் மொழியும் குமாரநந்தனின் சிறுகதைகளின் வலிமையான அம்சங்கள். கிராமங்களும் நகரங்களும் கதைகளுக்குரிய பின்னணிகளாக மாறிமாறி அமைக்கப்பட்டிருந்தாலும் மனித மனத்தில் சூட்சுமத்தை உணரவும் உணர்த்தவுமான ஆர்வமும் வேகமும் எல்லாக் கதைகளிலும் காணப்படுகின்றன. ஒருபுறம் இச்சையின் வலிமை. இன்னொருபுறம் இழிவின் அவமானம். ஒரு விளிம்பில் கலைந்துபோன கனவுகளின் கோலம். இன்னொரு விளிம்பில் இயலாமைகளுக்கு இடையே ஊறிப் பெருகும் வற்றாத கருணை. எதிரெதிர் புள்ளிகளுக்கிடையே ஊசலாடும் மன இயக்கத்தைச் சித்தரித்துக் காட்டும் கலையில் குமாரநந்தனின் கலையாளுமை புலப்படுகிறது. மனத்தின் ஆழத்தை அறிய முயற்சி செய்யும் படைப்புகள் அனைத்தும் மகத்தானவையே. அவ்வரிசையில் ஒருவராகக் குமாரநந்தன் இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
குமாரநந்தன்
குமாரநந்தன் (பி. 1973) இயற்பெயர் பாலமுருகன். சேலம் அருகே மல்லூரில் வசிக்கிறார். சேலத்திலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஏற்கெனவே ‘பதிமூன்று மீன்கள்’, ‘பூமியெங்கும் பூரணியின் நிழல்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், ‘பகற்கனவுகளின் நடனம்’ என்ற கவிதைத் தொகுப்பு ஆகியவை வெளிவந்துள்ளன. சிறுவர் கதைகள் என்ற முகநூல் பக்கத்தைத் தொடங்கி அவ்வப்போது சிறார்களுக்கான கதைகளைப் பதிவேற்றி வருகிறார். மின்னஞ்சல் : kumaarananthan@gmail.com கைபேசி : 7598176195
ISBN : 9789382033400
SIZE : 14.0 X 0.7 X 21.5 cm
WEIGHT : 176.0 grams