உலகத் தமிழர்களின் கவனத்தை பெருமளவிற்கு ஈர்த்துள்ள ஃபிரான்ஸிஸ் ஹாரிசனின் ‘ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்’ நூலின் இரண்டாம் பதிப்பு இது. ஆங்கில பதிப்பிலும் முதல் தமிழ் பதிப்பிலும் இடம்பெறாத இரண்டு பகுதிகள் ‘மருத்துவ ஊர்தி ஓட்டுநர்’, ‘போராளியின் மனைவி’ புதிய பதிப்பும் சேர்க்கப்பட்டுள்ளன. சாட்சியமற்ற போராக இதுவரை கருதப்பட்ட ஈழத் தமிழரின் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பல விரிவான சாட்சியங்களை முதல் முறையாக இந்நூல் முன்வைத்துள்ளது. இலங்கையில் முன்னர் பிபிசி செய்தியாளராக பணியாற்றிய ஃபிரான்சிஸ் ஹாரிசன் முள்ளிவாய்க்காலில் இறுதிநாள் வரை துன்புற்றோரின் அவல அனுபவங்களை அக்கறையுடனும் புரிதலுடனும் துல்லியமாக பதிவு செய்துள்ளார்.
ஃபிரான்சிஸ் ஹாரிசன்
கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியிலும் ‘ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்டு ஆப்பிரிக்கன் ஸ்டடீ’ஸிலும் லண்டன் இம்பீரியல் கல்லூரியிலும் கல்வி கற்றார். பல ஆண்டுகள் பிபிசியின் அயல் செய்தியாளராக ஆசியாவில் பணியாற்றினார். 2000 முதல் 2004 வரை பிபிசியின் இலங்கைச் செய்தியாளராகச் செயல்பட்டார். ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனத்திலும் பணிபுரிந்திருக்கிறார். இவருடைய கணவர் ஈரானியர். ஒரு மகன் இருக்கிறார்.