Your cart is empty.
ஈரம் கசிந்த நிலம்
கல்வி, மருத்துவம், கழிப்பிடம், சாலை போன்ற அடிப்படை வசதிகள் எட்டிப்பார்க்காத சிறிய கிராமத்தில் மண்ணை நம்பி உழைத்து வாழும் எளிய, படிப்பறிவற்ற மனிதர்களின் வாழ்வில் தவிர்க்கமுடியாமல் சில … மேலும்
கல்வி, மருத்துவம், கழிப்பிடம், சாலை போன்ற அடிப்படை வசதிகள் எட்டிப்பார்க்காத சிறிய கிராமத்தில் மண்ணை நம்பி உழைத்து வாழும் எளிய, படிப்பறிவற்ற மனிதர்களின் வாழ்வில் தவிர்க்கமுடியாமல் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அவற்றைத் தொடர்ந்து அதுவரையிலான நெருக்கமான மனித உறவுகள் சிதைந்து கிராமத்தின் அடிப்படைகள் ஆட்டம் காண்கின்றன. மறைந்துபோன கொங்கு கிராமம் ஒன்றின் கதை மட்டுமல்ல இந்த நாவல். இழந்துபோன பண்பாட்டுக் கூறுகளை மீண்டும் நம் நினைவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சான்றும்கூட.
சி.ஆர். ரவீந்திரன்
சி.ஆர். ரவீந்திரன் (பி. 1945) கோவை மாவட்டத்துக்காரர். சி.ஆர். ரவீந்திரன் ‘ஈரம் கசிந்த நிலம்’ என்ற இந்த நாவலின் வாயிலாக இந்திய இலக்கிய அளவில் அங்கீகாரம் பெற்றார். ‘வானம்பாடி’ கவிதா மண்டலத்துடன் இயங்கியவர். கவிதைக் கலையிலிருந்து விலகித் தொடர்ந்து சிற்றிதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்; எட்டுச் சிறுகதைத் தொகுப்புகளும் பன்னிரண்டு நாவல்களும் வெளிவந்துள்ளன. கவிஞர் சிற்பி, கவிஞர் கண்ணதாசன் ஆகியோர்களின் இலக்கியங்களைப் பற்றி இரண்டு விமர்சன நூல்களை எழுதியுள்ளார். நவீன நாடகங்கள் இரண்டு எழுதி வெளியிட்டு அரங்கேற்றியிருக்கிறார். ஓஷோ, கலீல் ஜிப்ரான், ஜேம்ஸ் ஆலன், வால்டர் டோயல் ஸ்டேபிள் போன்றவர்களின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மலையாள மொழியிலிருந்து கதை, கட்டுரை, கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து சிறுபத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார். வானம்பாடி, விழிப்பு, காற்று போன்ற சிற்றிதழ்களில் இவருக்கும் சிறப்பான பங்கு உண்டு. ஆல் என்ற கலை இலக்கிய இதழை தனிப்பட்ட முறையில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ‘ஈரம் கசிந்த நிலம்’ நாவல் வானொலி நாடக வடிவிலும், தூர்தர்சன் தொலைக்காட்சியிலும் வெளிவந்துள்ளது. கொல்கத்தா ‘பாரதிய பாஷா பரிஷத்’ கோவை ‘கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை’ விருதுகளையும் பெற்றுள்ளார். சாகித்ய அகாதமியின் தமிழ்ப்பிரிவு ஆலோசனைக்குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
ISBN : 9789386820778
SIZE : 13.7 X 1.0 X 21.5 cm
WEIGHT : 228.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மானசரோவர்
பகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ‘மானசரோவர்’ நாவலின் மு மேலும்