Your cart is empty.
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | தமிழ் கிளாசிக் நாவல் |
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளைக் கடந்த பின்னரும் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது.
ஜெயகாந்தன்
ஜெயகாந்தன் (1934 - 2015) த. ஜெயகாந்தன் தென்னார்க்காடு மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 1934இல் பிறந்தார். தொடக்கப் பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காத இவர், சுயமாகக் கற்று 1950 முதல் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை வசனங்கள், நேர்காணல்கள் என எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. கவிதைகளும் எழுதியுள்ளார். சிறுகதைகள், கட்டுரைகளின் முழுத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள், நாவல்கள் பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாளிதழ், இலக்கிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஞானபீட விருது, சாகித்ய அகாதெமி விருது, ராஜராஜன் விருது பெற்றுள்ளார். இவர் இயக்கிய ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் குடியரசுத் தலைவர் விருது (1964) பெற்றது. ஏப்ரல் 8, 2015 அன்று சென்னையில் காலமானார்.
ISBN : 9788189945060
SIZE : 13.9 X 1.5 X 21.4 cm
WEIGHT : 368.0 grams
வெற்றி (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
11 Oct 2025
ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ கிளாசிக் நாவல்
நூல் பரிந்துரை ”வாழ்க்கையின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் கதை”
…ஜெயகாந்தனின் எழுத்து எப்போதும் மனித மனதின் ஆழத்தைத் தொட்டுப் பேசும். ’ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ என்ற இந்த நாவலில் அவர் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வை எடுத்துக்கொண்டு, அதன்மூலம் சமூகத்தின் சிக்கலான உண்மைகளை வெளிப்படுத்துகிறார்…
நன்றி: வெற்றி (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுப் பதிவுக்கு:
https://www.instagram.com/p/DPrYtHOE891/...
வெற்றி (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
11 Oct 2025
ஜெயகாந்தன் எழுத்து என்றால் அது வெறும் கதை அல்ல — அது வாழ்க்கையின் பிரதிபலிப்பு.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் இருந்து அவர் கூறும் உண்மைகள் எவ்வளவு ஆழமானவை! ❤️
ஒவ்வொரு வரியும் நம்மை சிந்திக்க வைக்கும் — வீடு என்பதென்ன, உறவு என்பதென்ன, மனிதன் என்பதென்ன என்பதை. சுவர் கட்டினாலே வீடு இல்லை; புரிதலும், கருணையும் தான் ஒரு உலகத்தை உருவாக்குகின்றன.
ஜெயகாந்தனின் எழுத்து எப்போதும் மனித மனதின் ஆழத்தைத் தொட்டுப் பேசும். “ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்” என்ற இந்த நாவலில் அவர் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வை எடுத்துக் கொண்டு, அதன் மூலம் சமூகத்தின் சிக்கலான உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.
வீடு என்பது சுவர்கள் அல்ல, அதை நிரப்பும் உணர்ச்சிகளும் உறவுகளும் தான் என்பதை இந்த நூல் நமக்கு உணர்த்துகிறது. 💫
வாழ்க்கையின் கடினமான தருணங்களிலும் மனிதனாக இருப்பதற்கான அர்த்தத்தை, மரியாதையையும் மனிதத்துவத்தையும் ஜெயகாந்தன் நம்முள் விதைக்கிறார்.
அவரின் மொழி எளிமையானது, ஆனால் ஒவ்வொரு வரியும் மனதைத் தொடும் ஆழமுடையது. இந்தப் புத்தகம் படித்த பிறகு நீண்ட நேரம் நம் மனதில் ஒலிக்கிறது — நம் வாழ்க்கையையும், நம்மைச் சுற்றியுள்ள
“எப்பவும் சந்தோஷமாக இருக்கணும்னா நாம்ப மனசாலே சின்னக் குழந்தையாயிருக்கணும்னு தெரியுது. சின்னப் பசங்களா இருந்தப்போ ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் எவ்வளவு ஆச்சரியமா இருந்திச்சு?”
ஹென்றி, தேவராஜன், துறைக்கண்ணு, பேபி(பைத்தியக்காரி), அக்கம்மாள், இந்த கதாபாத்திரங்களை என்னால் நெஞ்சை விட்டு நீக்க முடியவில்லை.
ஜெயகாந்தனின் ஆகச்சிறந்த படைப்பு இதுவே என்று சொல்லும் அளவிற்கு இந்த புத்தகம் இருந்தது.
நிச்சயம் வாசித்து மகிழுங்கள். Rating ⭐ ⭐ ⭐ ⭐ ⭐
The story of an orphan who didn’t know his village or parents or caste and the world he understood through his experiences. Considered to be the best novel written by Jeyakantan. Kalachuvadu classic series.<\p>
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (விலையடக்கப் பதிப்பு)
-சமத்துவமும் இணக்கமான சக வாழ்வும் அன்பும் நிறைந்த உலகை அனைவருமே விரும்புகிறோம். அத்தகைய கனவின் கல மேலும்





