Your cart is empty.
எழுக, நீ புலவன்!
உள்ளூர் ஜமீன்தார் முதல் உலகப் போர் வரை பாரதியைச் சுற்றிச் சுழன்ற உலகத்தைக் காட்டும் கண்ணாடி ‘எழுக, நீ புலவன்!’. முக்கால் நூற்றாண்டுப் பாரதி ஆய்வுக்குப் பிறகும் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | கட்டுரைகள் |
உள்ளூர் ஜமீன்தார் முதல் உலகப் போர் வரை பாரதியைச் சுற்றிச் சுழன்ற உலகத்தைக் காட்டும் கண்ணாடி ‘எழுக, நீ புலவன்!’. முக்கால் நூற்றாண்டுப் பாரதி ஆய்வுக்குப் பிறகும் இன்னும் வெளிச்சம் பெறாத செய்திகளைப் புதிய விவரிப்புகளுடன் முன்வைக்கின்றன இந்நூல் கட்டுரைகள். பாரதி எழுதத் தவறிய எட்டயபுர வரலாறு, பாரதி வியந்த தாகூர், யார் என்று தெரியாமலேயே பாரதியை விவரித்த ஆங்கிலேய நிருபர் ஹென்ரி நெவின்சன், பாரதி காலத்து முக்கிய சர்வதேச அரசியல் நிகழ்வான முதல் உலகப் போர் பற்றிய அவனுடைய பார்வை, சுயஎள்ளலும் கழிவிரக்கமும் கூடிய பாரதி சுயசரிதைகளின் பின்னணி, ‘எழுக, நீ புலவன்!’ என்று பாரதிதாசனைப் பாரதி இனம்கண்டது, பாரதியின் எழுத்து வாழ்க்கை - இதழியல் பணி . . . எனப் பல்வேறு பொருள்களில் ஒளி பாய்ச்சும் கட்டுரைக் கோவை இந்நூல். பாரதி ஆய்வுக்கு முக்கியப் பங்காற்றியுள்ள ஆ. இரா. வேங்கடாசலபதியின் விறுவிறுப்பான நடையில் அமைந்த சுவையான கட்டுரைகள். ~ “பாரதி ஆய்வில் செயல்பட்டவர்கள் அநேகர். இந்த ஆய்வுகள் பொது வாசகனிடம் பாரதியை ஒரு திருஉருவாகவே அறிமுகம் செய்பவை; அவனுடைய செயல்பாடுகள் அனைத்தையும் அவதார லீலைகள் போன்று முன்வைப்பவை. அவற்றை இம்மையியல் சார்ந்ததாக நிலை நிறுத்தியிருப்பவர் ஆ. இரா. வேங்கடாசலபதி. பாரதியின் மேன்மைகளுடன் குறைகளையும் பிழைகளையும் சரிவுகளையும் ஆய்ந்து அவனுக்கு மானுட முகம் அளிப்பவை சலபதியின் ஆய்வுகளும் பதிப்புகளும்.” -- சுகுமாரன்
ISBN : 9789352440733
SIZE : 13.9 X 1.1 X 21.3 cm
WEIGHT : 258.0 grams