Your cart is empty.
இந்திய நாயினங்கள்
மனிதரை அண்டி நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்ட முதல் விலங்கினம் நாய். இதற்கான சான்றுகள் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்களாகத் தமிழ்நாட்டில் உண்டு. என்றாலும் மற்ற வளர்ப்பு விலங்குகளுடன் ஒப்பிட்டால் … மேலும்
மனிதரை அண்டி நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்ட முதல் விலங்கினம் நாய். இதற்கான சான்றுகள் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்களாகத் தமிழ்நாட்டில் உண்டு. என்றாலும் மற்ற வளர்ப்பு விலங்குகளுடன் ஒப்பிட்டால் வரலாற்றில் நாய் உதாசீனப்படுத்தப்பட்டது தெரிகின்றது. இமாலயத்திலிருந்து குமரிவரை இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு புவியியல் சூழலுக்கேற்ற பரிணாமத் தகவமைப்பில் உருவாகியிருந்த வெவ்வேறு நாயினங்களில் பல அழிந்து விட்டன. காலனித்துவ ஆட்சியில் மக்களின் கவனத்தை மேலைநாட்டு நாய்கள் ஈர்த்தன. எஞ்சியிருக்கும் சில உள்ளூர் நாய்களின் தனித்துவமும் அக்கறையின்மையால் சீரழிந்து வருகின்றது. நம்நாட்டு உயிரினப் பாரம்பரியத்தின் ஒரு சிறப்பு கூறான இருபத்தைந்து நாயினங்களை நூலாசிரியர் பதிவுசெய்கின்றார்.
ISBN : 9789386820389
SIZE : 13.9 X 0.8 X 21.3 cm
WEIGHT : 173.0 grams