Your cart is empty.
ஜீவனாம்சம்
பிராமண விதவைப் பெண்ணாகிய சாவித்திரியின் மன உலகை நினைவோட்டமாக விவரித்துச் செல்கிறது நாவல். ஆனால் அதற்குள் வாசகரை வெவ்வேறு கோணங்களுக்குள் நுழையச் செய்யும் நுட்பம் கைவந்திருக்கிறது. பெண்ணொருத்தியின் … மேலும்
பிராமண விதவைப் பெண்ணாகிய சாவித்திரியின் மன உலகை நினைவோட்டமாக விவரித்துச் செல்கிறது நாவல். ஆனால் அதற்குள் வாசகரை வெவ்வேறு கோணங்களுக்குள் நுழையச் செய்யும் நுட்பம் கைவந்திருக்கிறது. பெண்ணொருத்தியின் வாழ்வாகிய பெருவெளியைக் காட்டும் ஆற்றல் இதற்குள் பொதிந்திருக்கிறது.
சி.சு. செல்லப்பா
சி.சு. செல்லப்பா (1912 - 1998) பிறந்தது மதுரை மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு சொந்த ஊர் சின்னமனூர். சிறுகதை, நாவல், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் செல்லப்பா பங்களித்திருக்கிறார். சந்திரோதயம், தினமணி இதழ்களில் உதவியாசிரியராகப் பணியாற்றினார். இவரது முதன்மையான சாதனை எழுத்து இதழ். மிக மோசமான பொருளாதார நெருக்கடியைப் பொருட்படுத்தாமல் அந்த இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேல் கொண்டுவந்தார். பரிசு, பணம், புகழ் ஆகியவற்றைக் கண்டு மிரளக் கடைசிவரையிலும் மறுத்த படைப்பாளி அவர். புகைப்படம் எடுப்பதில் செல்லப்பாவுக்குத் தனி ஈடுபாடு உண்டு. ஜல்லிக்கட்டுப் பற்றித் தமிழில் வெளிவந்த முதல் படைப்பு என்று ‘வாடிவாச’லைக் குறிப்பிடலாம்.
ISBN : 9788189359843
SIZE : 14.0 X 0.8 X 21.5 cm
WEIGHT : 160.0 grams