Your cart is empty.
காட்டிலிருந்து வந்தவன்
சமகால ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகின் முக்கியமான ஆளுமைகளுள் சுதாராஜும் ஒருவர். இத்தொகுப்பில் சுதாராஜின் பத்துச் சிறுகதைகள் உள்ளன. ‘ஒரு துவக்கின் கதை’ இத் தொகுப்பில் எனக்கு … மேலும்
சமகால ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகின் முக்கியமான ஆளுமைகளுள் சுதாராஜும் ஒருவர். இத்தொகுப்பில் சுதாராஜின் பத்துச் சிறுகதைகள் உள்ளன. ‘ஒரு துவக்கின் கதை’ இத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. யுத்தத்துக்கு முந்திய அமைதியான யாழ்ப்பாணக் கிராமத்துச் சூழலில் தொடங்கும் கதை; யுத்தம் உக்கிரமடைந்து, கிராமங்கள் அழிந்து, குடும்பங்கள் சிதைந்து, மக்கள் சிதறிப் புலம்பெயர்ந்த சூழலில் முடிகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் வன்முறைக்கு எதிராக எழுதப்பட்ட மிகச்சிறந்த ஈழத்துச் சிறுகதைகள் சிலவற்றுள் இதுவும் கட்டாயம் இடம்பெறும். சுதாராஜின் கதைகள் வெவ்வேறு வகையில் மனித ஆளுமையின் உடைவுகளையும் அதன் உயிர்ப்பையும் பேசுகின்றன. மனிதநேயமும், மனிதத்தின் உயிர்ப்புமே அவரது அரசியலாகவும் அழகியலாகவும் படைப்புகளூடாக வெளிப்படுகின்றன. அவரது இலக்கியத்தில் போலிப்பகட்டு, சுத்துமாத்து எதுவுமில்லை. எல்லாமே எளிமையானவை; வெளிப்படையானவை; நேரடியாகச் சொல்லப்படுபவை. எம்.ஏ. நுஃமான்
சுதாராஜ்
சுதாராஜ் எழுபதுகளின் ஆரம்பத்தில் எழுத வந்தவர். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை உள்ளடக்கிய ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள், ஆறு சிறுவர் இலக்கிய நூல்கள், ஒரு நாவல் என சுதாராஜ் படைப்புப் பட்டியல் மிக நீளமானது. நூல்கள் யாவும் இந்தியாவில் மறுபதிப்புப் பெற்றுள்ளன. ஆறு நூல்கள் சிங்கள மொழிபெயர்ப்பாக வந்துள்ளன. சுதாராஜின் சில சிறுகதைகள் ஆங்கில மொழியிலும், ஒரு சிறுகதை ரஷ்ய மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சாஹித்ய மண்டல விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். சுதாராஜ் பொறியியலாளராகப் பணிபுரிந்தவர்.
ISBN : 9789386820211
SIZE : 14.0 X 0.6 X 21.3 cm
WEIGHT : 155.0 grams