Your cart is empty.
காவேரிப் பெருவெள்ளம் (1924)
2018ஆம் ஆண்டு கேரளத்தில் பெருவெள்ளம் விளைவித்த பேரழிவால் மலையாளிகள் 1924ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை நினைவுகூர்ந்தனர். அவ்வெள்ளம் கேரளத்தைவிடத் தமிழகத்தையே திக்குமுக்காடச் செய்தது. இந்நூல் அதை விவரிக்கிறது. … மேலும்
2018ஆம் ஆண்டு கேரளத்தில் பெருவெள்ளம் விளைவித்த பேரழிவால் மலையாளிகள் 1924ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை நினைவுகூர்ந்தனர். அவ்வெள்ளம் கேரளத்தைவிடத் தமிழகத்தையே திக்குமுக்காடச் செய்தது. இந்நூல் அதை விவரிக்கிறது. வளர்ச்சிக்காகக் காடுகளை அக்காலத்தில் அழித்ததால் மேற்குமலையில் பெய்த மாமழை அங்கு தங்காமல் பொலபொலவெனத் தரையிறங்கி பவானி, காவேரி, கொள்ளிட நதிகளில் பாய்ந்து ஆறுகளைப் பிளந்து, பாலங்களைப் பெயர்த்து, புவியைக் கீறி, சாலையைச் சல்லிசல்லியாக்கி மேற்குமலையடிவாரம் தொடங்கிக் கிழக்குக் கடற்கரைவரை பேரழிவை விளைவித்தது. இயற்கையான மேடுபள்ளத்தோடு செயற்கையான சாதிப் படிநிலைக்கேற்ப வாழிடம் கட்டப்பட்டிருந்தாலும் பெருவெள்ளம் அக்ரஹாரம் முதல் சேரிவரை வாரிச் சென்றது. இருப்பினும், படிநிலைச் சாதியம் மீண்டும் புனரமைக்கப்பட்டதை இந்நூல் விவாதிக்கிறது. சாமி சிலைகளைச் சாலைக்கு இழுத்து தமிழகத்தில் பத்தாயிரம்பேரைக் கொன்று பலரை அநாதையாக்கிய பெருவெள்ளத்தைப் பற்றி பிராமணர், செட்டியார், முதலியார், நாயுடு, நாயகர், சாயுபு எனப் பலரும் சிந்து பாடினர். மலையாளத்தைவிடத் தமிழில் கூடுதலாகப் படைக்கப்பட்ட இப்பெருவெள்ளச் சிந்துகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன
ISBN : 9789389820003
SIZE : 13.9 X 1.3 X 21.4 cm
WEIGHT : 264.0 grams
When the disaster of 2018 floods stuck, Keralites remembered the floods of 1924. Those floods in the cauvery affected kerala more than Tamilnadu. A book that explores the flood and its impact in detail. As forests were destroyed in the name of development, the rain over western ghats flooded Bhavani, Cauvery and Kollidam rivers. Bridges were broken, roads were destroyed and it impacted a wide region between western ghats and eastern coast. Even after the flood destroyed the hierarchical living spaces, they were rebuilt based on the same casteist structure. The book also contains songs written on the flood by poets from different communities.














