Your cart is empty.
கலைஞர் எனும் கருணாநிதி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆளுமையான கலைஞர் கருணாநிதியின் வாழ்வும் பயணமும் அசாதாரணமானவை. பிற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதாரச் சூழலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கழகத்திலும் மாநில, தேசிய அரசியலிலும் … மேலும்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆளுமையான கலைஞர் கருணாநிதியின் வாழ்வும் பயணமும் அசாதாரணமானவை. பிற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதாரச் சூழலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கழகத்திலும் மாநில, தேசிய அரசியலிலும் உரிய இடத்தைப் பெற அயராது உழைத்த அவருடைய ஈடுபாட்டுணர்வு இணையற்றது. தீவிரமான சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்ட பயணம் அது. அசாதாரணமான ஏற்றங்களும் சரிவுகளும் கொண்ட கருணாநிதியின் வாழ்வியக்கத்தைச் சார்பற்றும் புரிதலுணர்வுடனும் இந்நூலில் ஆராய்கிறார் வாஸந்தி.திருக்குவளையில் எளிய இசைக்குடும்பத்தில் பிறந்து, திரைத்துறை, இதழியல், மேடைப் பேச்சு, அரசியல், நிர்வாகம் ஆகியவற்றில் மிளிர்ந்த பன்முக ஆளுமையான கருணாநிதியின் பெருவாழ்வை அவரது இறுதிக்காலம்வரை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகியிருக்கிறது இந்நூல்.
ISBN : 9789388631242
SIZE : 13.8 X 1.0 X 21.5 cm
WEIGHT : 221.0 grams