Your cart is empty.
கரித்தாள் தெரியவில்லையா தம்பீ
-தகிக்கும் வெக்கை கொண்ட இராப்பொழுதின் அடர் இருளை அசைக்கும் மேலும்
-தகிக்கும் வெக்கை கொண்ட இராப்பொழுதின் அடர் இருளை அசைக்கும் பனஞ்சிறகு விசிறியில் தவ்விப் புரளும் மின் காற்றின் குளிர்ச்சியையும் எளிமையையும் கொண்டவை பெருமாள்முருகனின் கட்டுரைகள். ஈரம் ததும்பும் மொழியின் ஊடாக வேறுபட்ட கருப்பொருள்களைக் கண்டெடுத்த இவை பாராட்டுகளோடு எதிரிகளையும் நிரம்ப சம்பாதித்தவை. மேற்கோள்களையும் புள்ளி விவரங்களையும் நிராகரிக்கும் அதே வேளையில் சிறுகதைக்குரிய முனைப்பும் கவிதைத் தருணங்களும் கைவரப்பெற்றவை. இட்டேரித் தடத்தின் அழகை ஏளனம் செய்யும் வாழ்க்கையைப் படைப்புகளில் வன்மத்தோடு எதிர்கொண்ட பெருமாள்முருகன் நெடுஞ்சாலை மனிதர்களின் நகாசுகளை இக்கட்டுரைகளில் ஏளனத்தோடு கடந்து செல்கிறார். இளங்காலை அதிவேக ரயில் பயணத்தின் சிலிர்ப்பை நல்கும் பெருமாள்முருகனின் இன்னொரு முகமும் நன்றாகத் தான் இருக்கிறது.
ISBN : 9788189359393
SIZE : 14.0 X 0.9 X 21.5 cm
WEIGHT : 180.0 grams














