Your cart is empty.
கவர்னர் பெத்தா
ஒரு கனாபோல் நம்மைக் கடந்தோடும் காலத்தைக் கையில் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும் காலத்தின் கரைதல் மட்டுமல்ல; அவை நம் மனத்தின் ஈரத்தையும் … மேலும்
ஒரு கனாபோல் நம்மைக் கடந்தோடும் காலத்தைக் கையில் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும் காலத்தின் கரைதல் மட்டுமல்ல; அவை நம் மனத்தின் ஈரத்தையும் துடைத்துச் செல்கின்றன. வெறுமையாக நம்மைச் சூழப்போகும் தருணங்களை உடைத்தெறிந்து மீண்டும் நமக்குள் பசும்புல்போல் தழைக்க வைப்பதே மீரான் மைதீனின் கதைகள்! மனிதர்களை விட்டுச் செல்ல முடியவில்லையென்றால், நாம் மண்ணைவிட்டும் செல்ல முடியாது. மண்ணும் மனிதர்களுமாகக் கலந்து கட்டும்போது ஒளிர்கிற அன்பை - நேயத்தை ஓர் இலக்கியம் சுடராக நம் முன்னே கொண்டுவந்து கொட்டுகிற எழுத்துகள் மீரானுடையவை. “பார் இவ்வுலகை! பார் அதன் இன்பத்தை!” என்று சொல்வதற்கான கலை நயம் என்னவாக இருக்க முடியுமோ, அவ்வாறே இருந்துவிட்ட சில கதைகளின் தொகுப்பு இது. களந்தை பீர்முகம்மது
மீரான் மைதீன்
மீரான் மைதீன் (பி. 1968) குமரி மாவட்டம், பெருவிளை இவரது சொந்த ஊர். 1998இல் எழுதத் தொடங்கினார். இவரது சிறுகதைத் தொகுதிகள் : ‘கவர்னர் பெத்தா’, ‘ரோசம்மா பீவி’, ‘சித்திரம் காட்டி நகர்கிறது’. நாவல் ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’. குறுநாவல் ‘மஜ்னூன்’. இஸ்லாமிய சமூகத்தின் மைய ஓட்டத்திற்குள் நம் பார்வைப் புலன்களுக்கு அறிமுகப்படாத முஸ்லிம்களின் வாழ்க்கைத் தளத்தில் இவரின் கதை உலகம் இயங்குகிறது.
ISBN : 9789352440764
SIZE : 12.5 X 0.6 X 22.4 cm
WEIGHT : 130.0 grams
The collection of short stories by Meeran Maitheen gives the readers a refreshed perspective on life. Time passes fast like a dream, and we cannot hold back some moments even if we wish to. These stories are filled with moments like those and helps us find the humanity we missed with them. Evoking a love that is found when certain characters and landscapes meet, the writings lets us see this world and all it offers us with a new eye.














