Your cart is empty.
கயம்
விளிம்பு நிலையில் ஒதுங்கிக்கிடக்கும் குமரி மாவட்டத்தின் விளவங்கோட்டுத் தமிழை எந்தத் தயக்கமுமின்றி எழுத்துக்குக் கொண்டுவந்தவர் குமாரசெல்வா. தமிழ்ச் சிறுகதை மரபிலிருந்து விலகி, வாய்மொழிக் கதைகளின் அகச்சாயலை சுவீகரிக்கும் … மேலும்
விளிம்பு நிலையில் ஒதுங்கிக்கிடக்கும் குமரி மாவட்டத்தின் விளவங்கோட்டுத் தமிழை எந்தத் தயக்கமுமின்றி எழுத்துக்குக் கொண்டுவந்தவர் குமாரசெல்வா. தமிழ்ச் சிறுகதை மரபிலிருந்து விலகி, வாய்மொழிக் கதைகளின் அகச்சாயலை சுவீகரிக்கும் இவரது கதைகள் அதனூடே வாழ்வின் அபூர்வத் தருணங்களையும் துக்கங்களையும் வெளிப்படுத்துகின்றன. “அனுபவ உலகில் வாழும் மனிதர்களின் மனமொழியோடு படைப்பு மொழியை முடிந்தமட்டும் நெருக்கியிருப்பதில் தமிழுக்கு சோபைகள் சேர்ந்திருக்கின்றன” என்று இவரது கதைகள் குறித்து எழுதியிருக்கிறார் சுந்தர ராமசாமி. ராஜமார்த்தாண்டன்
குமாரசெல்வா
குமாரசெல்வா (பி 1964) குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் மார்த்தாண்டம் சொந்த ஊர். பெற்றோர் செல்லையன் நாடார் - செல்லத்தாய். இரண்டு ஆண்மக்களில் இவர் மூத்தவர். திருமணமாகிப் பத்து வருடம் குழந்தை இல்லாத பெற்றோர், இவர் பிறந்ததும் பெறற்கரிய செல்வமாக அழைத்த இயற்பெயர் செல்வகுமார். இலக்கியம் தனக்குள் பிடிபட ஆரம்பித்தபோது, யதார்த்தம் தலைகீழான உணர்வில் இவர் மாற்றி அமைத்த புனைபெயர் குமாரசெல்வா. ஐந்து வயதில் இளம்பிள்ளைவாதத்தால் பீடிக்கப்பட்டுத் தாயாரால் ஊர் ஊராகச் சுமந்து சென்று வைத்தியம் பார்த்து நோயின் சுவடுகூடத் தெரியாத அளவுக்குக் குணமடைந்தவர். ஏழுவயதில் தந்தையை இழந்து வறுமையை உண்டு ஊக்கம் பெற்றார். கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு அனைத்தையும் தாயின் கடின உழைப்பால் பெற்று, அதன் பலன் எதையுமே காணாமல் மறைந்த அந்த வாழ்வின் உன்னதத்தைப் பேறாய் அடைந்தவர். இவர் மனைவி டாக்டர் சரோஜாபாய், ஹோமியோபதி மருத்துவர். சீகன்பால்க், தியான்செல்வ் என இரண்டு மக்கள். கல்லூரி ஒன்றில் தமிழ்மொழி, இலக்கியம் கற்பிப்பது தொழில். முகவரி : 14-101கி, மக்கவிளாகம், வழுதூர், அம்சி, தேங்காய்ப்பட்டணம் 629173, கன்னியாகுமரி மாவட்டம். செல்பேசி : 9443808834
ISBN : 9788189945862
SIZE : 13.9 X 0.8 X 21.5 cm
WEIGHT : 231.0 grams
Kumaaraselva brough the Tamil dialect of Vilavangodu district to the forefront. He writes unapologetically in the language of his Kumari region. Moving past the Tamil short story tradition, Kumaraselva connects to the oral storytelling tradition and its inner world. Portraying the rare magical moments of human lives, these stories express the thin line of grief running through them too.














