Your cart is empty.



கொழுத்தாடு பிடிப்பேன்
வாய்மொழி மரபின் தனித் தன்மைகளை, எழுத்து மரபின் வசீகரங்களுடன் பிணைத்துப் பயன்படுத்தும் முத்துலிங்கத்தின் மொழி, அவருடைய சிறுகதைகளுக்கென்று ஒரு தனித்த அழகையும் அதன் தொடர்ச்சியாகத் தமிழ்ச் சிறுகதைகளுக்கு … மேலும்
வாய்மொழி மரபின் தனித் தன்மைகளை, எழுத்து மரபின் வசீகரங்களுடன் பிணைத்துப் பயன்படுத்தும் முத்துலிங்கத்தின் மொழி, அவருடைய சிறுகதைகளுக்கென்று ஒரு தனித்த அழகையும் அதன் தொடர்ச்சியாகத் தமிழ்ச் சிறுகதைகளுக்கு ஒரு புதிய சுவையையும் சேர்ப்பதாக அமைந்தது. பல்வேறு நிலப்பரப்புகள், மாறுபட்ட பருவநிலைகள், பரிச்சயமற்ற கலாசாரச் சூழல்களினூடாக நிகழும் இவருடைய கதைகளின் ஆதாரமான உணர்வு அங்கதம். எனினும், அதனடியில் விலக்க முடியாத நிழல்போல மானிட உணர்வுகளின் ஏக்கமும் நெகிழ்வும் துயரமும் கண்ணீரும் அழியாத சித்திரங்களாய் விரவிக் கிடக்கின்றன.
வெவ்வேறு பிரதேசங்களில், விதவிதமான பண்பாட்டுச் சூழலில் கிடந்துழலும் மனிதத்தொகையின் விநோதமான வாழ்வியல் சித்திரங்களினால் ஆனதொரு அழகிய கம்பளமாக இத்தொகுப்பை நாம் உருவகித்துக்கொள்ள முடியும்..
ISBN : d9789381969861
SIZE : 14.0 X 2.2 X 21.3 cm
WEIGHT : 540.0 grams