Your cart is empty.
-இளம் பிராயத்தின் தீவிரத்தில் வாழ்வையும் வாழ்வுக்கான பொருளையும் தேடும் பெண்களது ஊடாட்டம் காலவோட்டத்தில் மெல்ல நிலைகொள்ளும்போது தெளிந்தோ, மங்கியோ ஒரு புதிய வண்ணத்தை ஏற்கிறது. அப்போது உறவுகள் எதிர்பாராத புதிய பரிமாணத்தை அடைகின்றன. சுவாரஸ்யமான தொடர் நிகழ்வுகளின் பின்னணியில், குறித்த ஒரு காலகட்டத்துப் பெண்களைக் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் ‘மாய மலர்’ இந்த ஊடாட்டத்தையும், மாற்றத்தையும் மைய இழையாகக் கொண்டு நீள்கிறது. திருச்சியின் வெங்காட்டிலும் கொடைக்கானலின் தண்ணிலத்திலும் விரிவு கொள்ளும் கதையில் இந்தத் தீவிர எதிர்மையைத் தனது பாத்திரங்களில் பொதிந்துவைத்து நாவலாக்கியிருக்கிறார் லாவண்யா சுந்தரராஜன்.
நாவலின் பெண்களுக்கு வாழ்க்கை தனது மாயப் பேழையிலிருந்து எதைக் கையளித்தது என்பதற்கான விடையை நோக்கிக் கதை நகர்கிறது. ஒருபக்கம் காயமுற்ற பால்யம், ஆதர்ச நட்பு, காதல், தாம்பத்தியம் இவற்றால் உருவாகும் உறவுச் சிக்கல்களும், மறுபக்கம் குற்றவுணர்வும் வலிந்து ஏற்றுக்கொண்ட மாறாக் கன்னிமையும் உருவாக்கும் அக இறுக்கமுமாக நாவலின் கதாபாத்திரங்களை அலைக்கழிக்கின்றன. எல்லாப் பாவனைகளுக்கும் பகிர்தலுக்கும் அப்பால் கேட்கப்படாத மன்னிப்பும் காட்டப்படாத அன்புமே மறைந்து நிற்கிறது என்பதை வெவ்வேறு வழிகளில் புலப்படுத்த முயலுகிறது ‘மாய மலர்’.
ISBN : 9789361101724
SIZE : 14.0 X 2.0 X 21.0 cm
WEIGHT : 420.0 grams













