Your cart is empty.
மந்திரமும் சடங்குகளும்
மேலும்
மந்திரம் என்பது சொல்; சடங்கு என்பது செயல். இந்தியாவில் ஆதிகாலம்தொட்டே மனிதர்கள் இந்த இரண்டையும் பயன்படுத்திவந்திருக்கிறார்கள். உலகம், இயற்கை, வாழ்க்கை நிகழ்வுகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் மனிதர்கள் கண்டுபிடித்த பலவற்றில் மந்திரங்களுக்கும் சடங்குகளுக்கும் முக்கிய இடம் உண்டு. வேட்டைச் சமூகம் தொடங்கி வேளாண் சமூகம்வரை மந்திரச் சடங்குகள் உருப்பெற்று வளர்ந்துவந்தன. பொருளாதாரரீதியிலும் அறிவியலிலும் வளர்ச்சிபெற்றுள்ள இன்றைய நிலையிலும் மனிதர்கள் இவற்றைத் துறந்துவிடவில்லை.
மந்திரமும் மந்திரச் சடங்குகளும் தமிழ்ச் சமுதாயத்தில் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதுகுறித்து இந்த நூல் பேசுகிறது. மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல் ஆகிய இரு துறைகளின் துணையுடன் நூலாசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் மேற்கொண்ட ஆய்வின் விளைவே இந்த நூல்.
ISBN : 9789380240336
SIZE : 13.9 X 0.7 X 21.5 cm
WEIGHT : 230.0 grams
Mantras and Rituals have played a Crutial role in the social history of Mankind. This book is a study on Mantras based on two diciplines, Anthropology and Folklore.














