Your cart is empty.
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
மார்க்சியம் இறந்துவிட்டது, அது காலப்பொருத்தமற்றது என்ற கூச்சலுக்கு மத்தியில் மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் என்ற இந்நூலின் மீள்வருகை முக்கியமானது. இலக்கியத்தின் சமூக அடித்தளத்தை அதன் சமூக வேர்களைப் … மேலும்
மார்க்சியம் இறந்துவிட்டது, அது காலப்பொருத்தமற்றது என்ற கூச்சலுக்கு மத்தியில் மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் என்ற இந்நூலின் மீள்வருகை முக்கியமானது. இலக்கியத்தின் சமூக அடித்தளத்தை அதன் சமூக வேர்களைப் புரிந்துகொள்ளவும், இலக்கிய வரலாற்றை அற்புத நிகழ்வுகளாக அன்றி சமூக அசைவியக்கத்தின் வெளிச்சத்தில் காணவும், இலக்கியத்தை ஒரு அறிதல் முறையாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கை அனுபவத்தை இலக்கியம் எவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் படைப்பாளியின் கருத்துநிலைக்கும் இலக்கியப் படைப்புக்கும் இடையே உள்ள உறவைப் புரிந்துகொள்ளவும் மார்க்சியத் திறனாய்வு நமக்கு உதவுகிறது. இலக்கியம் பற்றிய நமது புரிதலை அது ஆழப்படுத்துகிறது. உடனடியான அரசியல் இலக்குகளுக்கு அப்பாலான, இலக்கியம் பற்றிய ஒரு அகன்ற பார்வையை அது நமக்கு வழங்குகிறது. தமிழ்ச் சூழலில் நிலைபெற்றுள்ள வரட்டு மார்க்சியப் பார்வையையும் எதிர் மார்க்சியப் பார்வையையும் விமர்சிக்கும் இந்நூலின் மீள்வருகை புதிய தலைமுறை வாசகர்களின் சிந்தனையைக் கிளறிவிடும் என்று நம்பலாம்.
ISBN : 9789382033493
SIZE : 13.9 X 1.0 X 21.4 cm
WEIGHT : 259.0 grams