Your cart is empty.
மாதொருபாகன்
மண் கொண்டு சிற்பங்களை உருவாக்கும்போது ஒன்றில் கைகளை முடமாக்கியும் ஒன்றில் வெறும் முண்டமாகவும் ஒன்றில் முகத்தை மழுக்கியும் அரைகுறையாக விட்டுவிட்டேனோ? முழுமையாகாத அவை பிசாசுகளின் ரூபம் பெற்று … மேலும்
மண் கொண்டு சிற்பங்களை உருவாக்கும்போது ஒன்றில் கைகளை முடமாக்கியும் ஒன்றில் வெறும் முண்டமாகவும் ஒன்றில் முகத்தை மழுக்கியும் அரைகுறையாக விட்டுவிட்டேனோ? முழுமையாகாத அவை பிசாசுகளின் ரூபம் பெற்று என்னை அந்தரத்தில் தூக்கி நிறுத்தி அங்கிருந்து பூமியை நோக்கி வீசிவிட்டனவோ? படைப்புகள் கர்த்தாவின்மேல் காழ்ப்புக் கொள்வது வழமைதானோ? படைத்தவனை நொந்துகொள்வதும் அவனோடு தீவிரமாக விவாதிப்பதும் சண்டையிடுவதும் அவனிலிருந்து விலகி சுயேச்சையாக உருக்கொள்வதும் நான் அறிந்தவை. பகையாகிப் படைத்தவனுக்கு எதிராகப் படை திரட்டி நிற்பது எனக்குப் புதிது. என்றால் கைகளைத் தூக்கிச் சரண்டைவதைத் தவிர வேறு வழியேது? பெருமாள்முருகன்
ISBN : d9789380240367
SIZE : 13.8 X 0.9 X 21.4 cm
WEIGHT : 190.0 grams