Your cart is empty.
மொழிபெயர்ப்புப் பார்வைகள்
“மொழி என்பது அகராதிகளிலும் இலக்கண நூல்களிலும் மட்டும் அடங்கிவிடும் ஒரு திட்டவட்டமான அமைப்பு அல்ல. அது, தான் புழங்கும் பண்பாட்டுச் சூழலின் உயிரோட்டமான பிரதிபலிப்பு. அகராதிகளாலும் இலக்கண … மேலும்
“மொழி என்பது அகராதிகளிலும் இலக்கண நூல்களிலும் மட்டும் அடங்கிவிடும் ஒரு திட்டவட்டமான அமைப்பு அல்ல. அது, தான் புழங்கும் பண்பாட்டுச் சூழலின் உயிரோட்டமான பிரதிபலிப்பு. அகராதிகளாலும் இலக்கண நூல்களாலும் ஒருபோதும் முழுமையாக வரையறுத்துவிட முடியாத பண்பாட்டுத் தளத்தைத் தன் ஊற்றாகக்கொண்ட இடையறாத நீரோட்டம். எனவே மொழிபெயர்ப்பு என்பதும் மொழியைப் போலவே அகராதிகளையும் இலக்கண நூல்களையும் தாண்டி விரிவடையும் ஒரு பண்பாட்டுச் செயல்பாடாகவே இருக்க முடியும்.” அரவிந்தன், இதழ் 86, பிப்ரவரி 2007 “மொழிபெயர்ப்பு என்பது வெறும் அறிவுத்தளம் சார்ந்த பயிற்சி மட்டுமே அல்ல. அது ஒரு சவால் என்பேன். மூலப்படைப்பை வாசிக்கும்போது உண்டாகும் உணர்வுக்கு நெருக்கமான உணர்வு மொழிபெயர்ப்பில் கிடைக்கும்போதுதான் மொழிபெயர்ப்புப் பணி நிறைவடைய முடியும். அதற்கு மொழி ஆர்வம், தேர்ச்சி, மொழிபெயர்ப்புத் திறன், படைப்பாற்றல், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய அனைத்தும் தேவை”. அமரந்தா 45, ஜனவரி பிப்ரவரி 2003
ISBN : 9789384641153
SIZE : 13.8 X 1.0 X 21.5 cm
WEIGHT : 227.0 grams
Language cannot be defined by the lexicons, dictionaries and grammar books. It is a potent and dynamic reflection of the culture, society and the environment. Thus, translation is also an extension of such cultural representation. This book is a collection of articles on translation, originally published in Kalachuvadu magazine.














