Your cart is empty.
ஊரும் சேரியும்
நம் நாட்டில் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக கல்வி இல்லை. அத்தகு சூழலை உருவாக்க இயலாததற்கான காரணங்களில் வறுமையும் ஒன்று. வறுமைக்கொடுமையோடு சாதிக்கொடுமையும் சேர்ந்துகொள்ளும்போது இயலாமையும் ஆற்றாமையும் இன்னும் … மேலும்
நம் நாட்டில் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக கல்வி இல்லை. அத்தகு சூழலை உருவாக்க இயலாததற்கான காரணங்களில் வறுமையும் ஒன்று. வறுமைக்கொடுமையோடு சாதிக்கொடுமையும் சேர்ந்துகொள்ளும்போது இயலாமையும் ஆற்றாமையும் இன்னும் தீவிரமடைகின்றன. வறுமைக்கான காரணத்தையும் சாதிக்கான காரணத்தையும் என்னவென்றே அறியாத ஓர் இளம்நெஞ்சம் இக்கொடுமைகளிடையே உழல நேரும்போது படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. மிகச்சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள்கூட இந்த இரண்டு காரணங்களால் சின்னஞ்சிறுவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது மிகப்பெரிய கொடுமை. இத்தகு சூழலில் அங்குலம்அங்குலமாக நகர்ந்தும் எதிர்ப்புகளை விவேகமுடன் எதிர்கொண்டும் முன்னேறிய வாழ்க்கைப்பயணத்தின் அனுபவங்களை சித்தலிங்கையாவின் சுயசரிதை முன்வைக்கிறது. எந்த இடத்திலும் அரற்றல் இல்லை. ஆவேசம் இல்லை. தன்னிரக்கமும் இல்லை. இது இந்த நூலின் மிகப்பெரிய பலம். ஒவ்வொரு பகுதியிலும் தெளிவு இருக்கிறது. குறும்பும் சிறுநகையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இழையோடுகின்றன. தன்னம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு அனுபவத்தையும் கலைத்தன்மையோடு முன்வைக்கும் ஆற்றல் இருக்கிறது. இந்த ஆற்றலே இச்சுயசரிதையை மிகமுக்கியமான நூலாகக் கருதவைக்கிறது. பாவண்ணன்
சித்தலிங்கையா
நவீன கன்னட இலக்கியத்தில் தலித் குரலைப் பதிவு செய்த முன்னோடிப் படைப்பாளிகளில் முக்கியமானவர். எழுபதுகளில் உருவான தலித் எழுச்சியில் இவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது. இவர் இயற்றிய ‘ஹொலெமாதிகர ஹாடு’ என்னும் கவிதைத் தொகுதி ஆயிரக்கணக்கில் விற்பனையாகிக் கர்நாடகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இவருடைய பெயரும் புகழும் பரவக் காரணமாக இருந்தது. இவருடைய கவிதைகள் மூலைமுடுக்குகளெங்கும் பாடப்பட்டு, கன்னட மண்ணில் தலித் இயக்கம் உருவாக விதையாகவும் உரமாகவும் இருந்தன என்று சொல்லலாம். கர்நாடகத்தில் தலித் சங்கர்ஷ சமிதி என்னும் அமைப்பைக் கட்டியெழுப்பியவர்களில் சித்தலிங்கையாவும் ஒருவர். இவருக்கு முனைவர் பட்டம் கிடைப்பதற்குக் காரணமான நாட்டுப்புறக் கடவுள்கள் பற்றிய ஆய்வேடு இன்றளவும் ஆய்வுலகத்தில் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கன்னடத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகளும் மூன்று கன்னட நாடகங்களும் மூன்று கட்டுரைத் தொகுதிகளும் இவருடைய பிற படைப்புகள். கர்நாடகச் சட்ட மேலவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். கன்னட வளர்ச்சிக்கழகத்தின் தலைவராகவும் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
ISBN : 9789384641177
SIZE : 13.8 X 0.9 X 21.4 cm
WEIGHT : 200.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்