Your cart is empty.
சராசரி குடும்ப வாழ்வை வாழ விரும்பாமல் வீட்டைவிட்டு ஓடிப்போகும் இளைஞன் ஒருவன் முழுமையான மனிதத்தை நோக்கி வீடு திரும்பும் கதை இது. இந்து மத ஆசிரமம் ஒன்றைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இந்நாவல், அதன் மேன்மைகளையும் கீழ்மைகளை யும் பாகுபாடற்று விவரிக்கிறது. மானுடனின் மறைமுகமான மாபெரும் போராட்டம் வாழ்க்கை யின் விதிகளில் இருந்து தப்பிப் பதுதான். இந்நாவலின் கதை நாயகனும் அவ்வாறே தப்பிக்க முயற்சிக்கிறான். தனது பலவீனங்களில் பலியாகும் ஒவ்வொரு சமயத்திலும் கனவுகளற்ற சோம்பேறிகளால் அவன் சிறகுகள் ஒட்ட வெட்டப்படுகின்றன. ஆனால் அவனது கனவு அவனை ஒரு மீட்பரைப்போல மீட்டெடுத்துக்கொண்டே இருக்கிறது. உலகம் சுற்றித் தேடி அலைந்த பிறகே தன் கால்களின் கீழே பொக்கிஷம் இருப்பதைக் கண்டடையும் ‘ரசவாதி’ நாவலின் சிறுவன் சந்தியாகுவைப் போல இவனும் ஊர் சுற்றலுக்குப் பிறகே தனது ‘பொக்கிஷ’த்தைக் கண்டடைகிறான். தமிழில் இத்தளத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கும் முதல் நாவல். ஆரோக்கியமான பார்வையை முன்வைப்பதனூடாக இவ்வரவு தனது முக்கியத்துவத்தைப் பெறுகிறது. புனிதத்தின் பெயராலும் வரலாற்றின் ஞாபகங்களுக்குப் பதிலுரைக்கும் விதமாகவும் எழுப்பப்படும் வன்முறை களையும் கேள்விக்குட்படுத்துகிறது அரவிந்தனின் ஆழமான பார்வை
அரவிந்தன்
அரவிந்தன் (பி.1964) இதழாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இதழியல் துறையில் முப்பதாண்டுக் கால அனுபவம்கொண்டவர். இந்தியா டுடே, காலச்சுவடு, சென்னை நம்ம சென்னை, நம் தோழி ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார். தி இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். இலக்கியம், தத்துவம், பெண்ணுரிமை, அரசியல், மொழி, திரைப்படம், கிரிக்கெட் ஆகியவற்றைக் குறித்த கட்டுரைகளை எழுதிவருகிறார். சிறுகதைகள், நாவல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், அரசியல் விமர்சனம், மொழிபெயர்ப்பு, மகாபாரதச் சுருக்கம், திரைப்படம், கிரிக்கெட் குறித்தவையென இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் ‘சமயம் தமிழ்’ என்னும் இணையதளத்தின் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இதழியல் பயிற்சி வகுப்பு நடத்திய அனுபவமும் இவருக்குண்டு. தற்போது லயோலா கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராக இதழியல் மாணவர்களுக்குப் பாடம் எடுத்துவருகிறார். விருதுகள் • தமிழ்ப் புத்தக நண்பர்கள் நடத்தும் மாதாந்தர விமர்சனக் கூட்டத்தில் இமையத்தின் படைப்புகள் குறித்து ஆற்றிய உரைக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான ‘ஆண்டின் சிறந்த உரை’ விருது. • பால சரஸ்வதி மொழியாக்க நூலுக்கு ‘கனடா இலக்கியத் தோட்டம்’ வழங்கும் ‘சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது (2017).’
ISBN : 9789384641047
SIZE : 13.9 X 2.0 X 21.5 cm
WEIGHT : 435.0 grams
A young man who doesn't want to lead a normal life, slips away from his home and understands humanity during his quest. This novel is mainly based on a Hindu hermitage and describes its both sides. The protagonist of this novel, like any other common man, strives to escape from the rules of life. But, he finally realizes that the treasure of happiness he is after, actually resides within. This beautiful novel, questions the violence unleashed in the name of holiness.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ராணி வேலு நாச்சியார் - சிவகங்கையின் சாகச அரசி
-பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆற்காட்டின் பிரதான மாகாணங்களை
நவாப்கள் தங்கள் கட்ட மேலும்
										
									
		
                
                    
                        
                
            
        
    













