Your cart is empty.
பெரியாரின் நண்பர்
தென்னாட்டுத் திலகர் என்று புகழப்பெற்ற சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் (1887-1957) வாழ்க்கை வரலாறு இந்நூல். தன் பேச்சாற்றலால் தமிழகக் காங்கிரசை மக்களிடம் கொண்டுசென்ற இப் பேராளுமையின் … மேலும்
தென்னாட்டுத் திலகர் என்று புகழப்பெற்ற சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் (1887-1957) வாழ்க்கை வரலாறு இந்நூல். தன் பேச்சாற்றலால் தமிழகக் காங்கிரசை மக்களிடம் கொண்டுசென்ற இப் பேராளுமையின் சமூக, அரசியல், பத்திரிகைத் துறைப் பங்களிப்பை விவரிக்கும் வரலாறு இது. தமிழக சமூக நீதிப் போராட்டங்களான சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், காஞ்சிபுரம் காங்கிரசு மாநாடு, கல்பாத்தி தலித் நுழைவுத் தடுப்பு, (குலக்) கல்வித் திட்ட எதிர்ப்பு . . . உள்ளிட்ட அரை நூற்றாண்டுத் தமிழக சமூக அரசியல் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளைச் சமகால ஆதாரங்களின் அடிப்படையில் இந்நூல் விவரிக்கிறது. வ.உ.சி., பெரியார், இராஜாஜி, காந்தி, சாவர்கர், ஷியாமா பிரசாத் முகர்ஜி, கே.எம். பணிக்கர் தொடர்பில் இது வரை வெளிவராத பல முக்கியச் செய்திகள் முதன் முறையாக இந்நூலில் இடம்பெறுகின்றன. அக்கால இந்திய - தமிழக அரசியல் பின்புலத்தில் வரதராஜுலு நாயுடுவின் வரலாறு சுவாரசியமான நடையில் எழுதப்பட்டுள்ளது.
ISBN : 9789381969120
SIZE : 14.1 X 2.3 X 21.6 cm
WEIGHT : 520.0 grams
This is a biography of Dr. Varadarajulu Naidu. Naidu popularised Congress in Tamil Nadu. This book describes important social and historical events of Dr. Naidu on the basis of contemporary records. Unpublished events in the lives of Periyar, Rajaji, VOC, Gandhiji, Savarkar, K.M.Panicker and others are included in this edition.














