Your cart is empty.
பெயரழிந்த வரலாறு
கண்டுகொள்ளப்படாதிருந்தவர் என்ற அயோத்திதாசர் மீதான இதுவரையிலான பார்வையை இத்தொகுப்பு கேள்விக்குட்படுத்துகிறது. பாரதி, உவேசா, இரட்டைமலை சீனிவாசன், ம. சிங்காரவேலர், ம. மாசிலாமணி, ஜி. அப்பாதுரை, மயிலை சீனி. … மேலும்
கண்டுகொள்ளப்படாதிருந்தவர் என்ற அயோத்திதாசர் மீதான இதுவரையிலான பார்வையை இத்தொகுப்பு கேள்விக்குட்படுத்துகிறது. பாரதி, உவேசா, இரட்டைமலை சீனிவாசன், ம. சிங்காரவேலர், ம. மாசிலாமணி, ஜி. அப்பாதுரை, மயிலை சீனி. வேங்கடசாமி ஆகிய அவரின் சமகால ஆளுமைகளோடும் அவர்தம் சிந்தனைகளோடும் அயோத்திதாசர் ஊடாடியத் தருணங்களைக் கண்டறிவதன்மூலம் மேற்படி பார்வையை எதிர்கொண்டிருக்கிறது. பெயரைச் சுட்டாமல் மறைபொருளாக இழையோடிக்கிடக்கும் இவர்களுக்கிடையேயான உறவும் முரணும் ஒப்பீடு, குறியீடுகளைப் பொருள்கொள்ளுதல், மௌனங்களை வாசித்தல் போன்ற முறையியல்கள் வழியாக அபாரமாக வெளிப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் இயக்கம் என்பதன் அர்த்தத்தை மறுவரையறை செய்து அயோத்திதாசர் ஓர் இயக்கம் என்று வாதிடுகிறார் ஸ்டாலின் ராஜாங்கம். நவீன தமிழ்ச் சமூகத்தின் அறிவியக்க வரலாறாகவும் பரிணமித்திருக்கும் இந்நூல் அயோத்திதாசரை அவர்கால வரலாற்றில் வைத்துப் புரிந்துகொள்ள வழிகாட்டுகிறது. தரவுகளைவிட அவற்றை வாசிக்கும் முறையியல் சார்ந்தே அர்த்தங்கள் உருவாகின்றன என்று கூறும் இந்நூல், நமது முறையியல் பற்றிய விவாதத்தை நிகழ்த்தியபடியே முன் நகர்ந்திருக்கிறது.
ISBN : 9789389820041
SIZE : 13.9 X 1.4 X 21.3 cm
WEIGHT : 300.0 grams
A book on Tamil anti-caste activist, writer and philosopher Iyothee Thass by Stalin Rajangam. Iyothee Thass was considered unnoticed by his contemporaries, Stalin’s book questions this notion. He explores Iyoothee Thass’s direct and indirect interactions with Bharathi, U.Ve.Saa, Irattaimalai Seenivasan, Mayilai Seeni Venkatasaamy and others. Despite not mentioning each other’s names, they had agreements and contradictions, which were expressed in their writings. Stalin reads the silences in their lines, compares their thoughts and gives us a portrait of Iyoothee Thass as an intellectual movement by himself. The book also gives us a slice of the history of intellectual movements in Tamil, and questions the ways we read history.














