Your cart is empty.
பிறக்கும் ஒரு புது அழகு
-ஊடகங்களின் அரசியல், அவை பின்பற்ற வேண்டிய அறம், கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், அவை மக்களோடு கொள்ளும் தொடர்பு, கொள்ள வேண்டிய உறவு என்று வெவ்வேறு கோணங்களில் இந்நூலின் … மேலும்
-ஊடகங்களின் அரசியல், அவை பின்பற்ற வேண்டிய அறம், கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், அவை மக்களோடு கொள்ளும் தொடர்பு, கொள்ள வேண்டிய உறவு என்று வெவ்வேறு கோணங்களில் இந்நூலின் கட்டுரைகள் விவாதங்களைத் திறந்துவிடுகின்றன. ஊடக அரசியலின் பல்வேறு பரிமாணங்களையும் கடந்த பத்தாண்டுகளில் ஊடகங்கள் அடைந்துள்ள பரிணாம வளர்ச்சிகளையும் தாக்கங்களையும் இக்கட்டுரைகள் விவரிக்கின்றன. அரசு அமைப்புகளிடமிருந்து ஊடக சுதந்திரம் வேண்டப்படுவதைப் போல ஊடகங்களிடமிருந்து சிவில் சமூகத்தின் சுதந்திரம் வேண்டப்பட வேண்டியதன் தேவையையும் இக்கட்டுரைகள் முன்னிறுத்துகின்றன. ஊடகக் கட்டுப்பாடு பற்றித் தமிழில் - அநேகமாக இந்தியாவில் - பேசிய முதல் கட்டுரையான ‘சூரியன் விழுங்கும் நாடு’ சன் டிவியின் ஆதிக்கம் பற்றிய விவாதம் 2006 சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெற வழிகோலியது. பல புதிய கட்டுரைகளுடன் கண்ணனின் முந்தைய தொகுப்புகளில் இடம்பெற்றிருந்த ஊடகங்கள் தொடர்பான சில கட்டுரைகளும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
ISBN : d9788189359959
SIZE : 14.2 X 1.0 X 21.5 cm
WEIGHT : 225.0 grams