Your cart is empty.
பிறகொரு இரவு
தேவிபாரதியின் இந்த நான்கு கதைகளையும் வாசிக்கையில் எனக்கு வசப்பட்ட கருத்து இலக்கியப் புனைவில் அவருடைய முதன்மையான கவனம் கவிந்திருப்பது மனிதச் செயல்பாடுகளின் அறச் சார்பின் மீதுதான் என்பது. … மேலும்
தேவிபாரதியின் இந்த நான்கு கதைகளையும் வாசிக்கையில் எனக்கு வசப்பட்ட கருத்து இலக்கியப் புனைவில் அவருடைய முதன்மையான கவனம் கவிந்திருப்பது மனிதச் செயல்பாடுகளின் அறச் சார்பின் மீதுதான் என்பது. அதை நியாயம் -அநியாயம், நன்மை - தீமை, ஏற்றுக்கொள்ளத் தகுந்தவை - புறக்கணிக்க வேண்டியவை, இரங்குதலுக்குரியவை -கொண்டாடப்பட வேண்டியவை என்ற எளிய எதிர்ச் சொற்களால் வகுக்கப்பட முடியாத ஒன்றாகப் புனைய அவரால் நேர்மையாக முடிந்திருக்கிறது. அவர் இந்தக் கதைகளில் ஒன்றில் இடம் பெறச்செய்திருக்கும் அரூப பாத்திரமான டால்ஸ்டாயின் அக்கறையும் அறச் சிக்கலைப் பற்றியதுதான். டால்ஸ்டாய்க்கு அவர் பார்த்த வாழ்க்கை. தேவி பாரதிக்குத் தான் பார்க்கும் வாழ்க்கை. இலக்கியத்தில் வேறு என்ன செய்யமுடியும், பாழாய்ப் போகிற மனித வாழ்க்கையை விசாரிக்காமல்? முன்னுரையில் சுகுமாரன்
ISBN : 9788189945695
SIZE : 14.0 X 0.9 X 21.7 cm
WEIGHT : 173.0 grams