Your cart is empty.
ரெமோன் எனும் தேவதை
மனித உடல் என்பது அரசியல் களம். மனித உடல் சார்ந்த உறவுகள் பெரும் அரசியல் தந்திரங்கள். சித்துராஜ் பொன்ராஜ் -இன் சிறுகதைகள் ஓரினப் பாலுணர்வு, உடை மாற்றி … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | சிறுகதைகள் |
மனித உடல் என்பது அரசியல் களம். மனித உடல் சார்ந்த உறவுகள் பெரும் அரசியல் தந்திரங்கள். சித்துராஜ் பொன்ராஜ் -இன் சிறுகதைகள் ஓரினப் பாலுணர்வு, உடை மாற்றி அணிந்து கொள்ளும் பழக்கம், வர்த்தக உடல் உறவு, மனிதர்கள் மீது ஒருவருக்கு ஒருவர் நடத்திக் காட்டும் உடல் மற்றும் மன ரீதியிலான வன்முறைகள் என்று பல்வேறு தளங்களைக் கடந்து பயணிக்கின்றன. மனித உடல் என்பது ஒரு சதுப்பு நிலம். அதில் மிருகங்களும் திடகாத்திரமான பூதங்களும் தேவதைகளைப் போல் உருவம் மாற்றிக் கொண்டு அலைகின்றன. தேவதைகள் சடசடக்கும் இறக்கைகள் சகிதமாக நரபட்சிணிகள். ‘ரெமோன் எனும் தேவதை’ சித்துராஜ் பொன்ராஜ் -இன் இரண்டாவது தமிழ்ச் சிறுகதை தொகுப்பு.
சித்துராஜ் பொன்ராஜ்
சித்துராஜ் பொன்ராஜ் (பி. 1973) சித்துராஜ் பொன்ராஜ் (Sithuraj Ponraj) தமிழ், ஆங்கிலம், ஸ்பானிய மொழிகளில் கதை, கவிதை எழுதி வருகிறார். அவருடைய முதல் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பான ‘மாறிலிகள்’ தமிழ்ப் புனைவுப் பிரிவில் 2016ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசையும் அவருடைய முதல் தமிழ்க் கவிதைத் தொகுதி ‘காற்றாய் கடந்தாய்’ அதே ஆண்டு சிங்கப்பூர் இலக்கிய தமிழ்க் கவிதைப் பிரிவில் தகுதிப் பரிசையும் வென்றன. தமிழில் ‘பெர்னுலியின் பேய்கள்’ என்ற நாவலையும் இரண்டு சிறுவர் நாவல்களையும் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் இவரது முதல் கவிதைத் தொகுதியான ‘The Flag Party’ 2017ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்தது. இவருடைய ஸ்பானியக் குறுங்கதைத் தொகுப்பு 2018 ஜனவரியில் வெளிவரவிருக்கிறது. மின்னஞ்சல்: sithurajponraj134@gmail.com
ISBN : 9789386820846
SIZE : 13.7 X 0.7 X 21.5 cm
WEIGHT : 201.0 grams
The human body is a political space, and relationships are political gameplay. In his second short story collection, An Angel named Romon, Siddhuraj Ponraj writes about gay relationships, crossdressing, commercial sex, trauma that humans inflict on one another and much more. In his stories, with the human body as playground, animals and demons walk through disguised as angels.














