-சங்க இலக்கியத்திலும் மானுடவியலிலும் புலமை கொண்ட தமிழறிஞர் பி.எல். சாமி சங்க இலக்கியத்தில் முருகக் கடவுளுக்கு இருக்கும் இடத்தை ஆய்வு செய்து எழுதிய நூல் இது.
-சங்க இலக்கியத்திலும் மானுடவியலிலும் புலமை கொண்ட தமிழறிஞர் பி.எல். சாமி சங்க இலக்கியத்தில் முருகக் கடவுளுக்கு இருக்கும் இடத்தை ஆய்வு செய்து எழுதிய நூல் இது.
முருகனின் தோற்றக் கதைகள் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்திலிருந்து பெறப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தமிழில் முருகக் கடவுளின் தொன்மம் காலந்தோறும் பெற்றுவந்த கருத்தியல் வளர்ச்சியை விளக்கியிருக்கிறார்.
‘திருமுருகாற்றுப்படை’யில் அந்தணர் தொழும் முறை, வட கேரளத்தில் வேலன் களம் இழைத்துக் குருதிப்பலி பெய்யும் சடங்குகள் ஆகியவற்றையும் விளக்கியிருக்கிறார். பழங்குடி மரபுமுதல் சமகாலம் வரையான முருகனின் தொன்மத்தை இந்நூலில் சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ளார்.