Your cart is empty.
சப்தங்கள்
வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் - ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ - … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: குளச்சல் மு. யூசுப் |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | மொழிபெயர்ப்பு நாவல் |
வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் - ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ - இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மக’ளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது. சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.
வைக்கம் முகம்மது பஷீர்
வைக்கம் முகம்மது பஷீர் (1908 - 1994) 1908 ஜனவரி 19ஆம் தேதி கேரளா வைக்கம் தாலுகாவில் தலையோலப் பரம்பில் பிறந்தார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது வீட்டைவிட்டு ஓடி, இந்திய தேசியக் காங்கிரஸில் சேர்ந்து உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டார். சுதந்திரப் போராட்ட வீரராக சென்னை, கோழிக்கோடு, கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பகத்சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கிச் செயல்பட்டார். அமைப்பின் கொள்கை இதழாக ‘உஜ்ஜீவனம்’ வார இதழையும் தொடங்கினார். பத்தாண்டுகள் இந்தியாவெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்காவிலும் அரேபியாவிலும் சுற்றினார். இக்காலகட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை. ஐந்தாறு வருடங்கள் இமயமலைச் சரிவுகளிலும் கங்கையாற்றின் கரைகளிலும் இந்து துறவியாகவும் இஸ்லாமிய சூஃபியாகவும் வாழ்ந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம், சிறப்பு நல்கை, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட்., சம்ஸ்கார தீபம் விருது, பிரேம் நசீர் விருது, லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது, முட்டத்து வர்க்கி விருது, வள்ளத்தோள் விருது, ஜித்தா அரங்கு விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றவர். 1994 ஜூலை 5ஆம் தேதி காலமானார். மனைவி: ஃபாபி பஷீர், மக்கள் : ஷாஹினா, அனீஸ் பஷீர்.
ISBN : 9788189945879
SIZE : 13.8 X 0.5 X 21.4 cm
WEIGHT : 130.0 grams
சர்மி குணம் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
2 Mar 2026
1950களில் எழுதப்பட்ட இது வைக்கம் முகம்மது பஷீரின் புகழ் பெற்ற குறு நாவல் 'சப்தங்கள்',
விலை மாதர்கள், பிச்சைக்காரர்கள், அனாதைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் உலகத்தை வெளிப்படுத்துகிறது. தொழு நோயால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரன் ஒருவர் பஷீரை சந்திக்கிறார் இருவரின் உரையாடலாக நாவல் நகர்கிறது .. நாவலின் நிறைய கேள்விகள் அதற்கான பதில்கள் வலிகள், அவருக்கு ஏற்பட்ட மாற்றங்கள், நோய் வெறுப்பு , காதல் , ஓரினச் சேர்க்கை என்றவாறு கதை மிகவும் நகைச்சுவையாக கொண்டு செல்ல படுகிறது, பஷீர் என்றால் சொல்லவா வேண்டும்.. தற்கொலைக்கு செல்லும் ஒருவருடய மனநிலை எப்படி இருக்கும், இப்படி நிறைய விடயங்கள் பஷீரின் பாங்கில் சொல்லப்பட்டிருக்கின்றது. வாசிச்சு பாருங்க பிரண்ட்ஸ் 🥰
This book includes Basheer’s two very popular short fictions – Sabdangal and Moonucheettu vilayattukaranin Makal.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
உலகப் புகழ்பெற்ற மூக்கு (இ-புத்தகம்)
கதைகள் நம் வாழ்வில் கொட்டிக் கிடக்கின்றன. அடையாளம் காணத் தெரிந்த கண்களுக்கு அவை தம்மை வெளிப்படுத் மேலும்
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது (இ-புத்தகம்)
-‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்த மேலும்














