Your cart is empty.


சிங்கைத் தமிழ்ச் சமூகம்
சிங்கப்பூரின் பத்திரிகை, புனைவுகள் ஊடாகச் சிங்கை மக்களின் நேற்றையதும் இன்றையதுமான சமூக வாழ்க்கையை ஆய்வின் வழிக் கண்டு தெளியும் கட்டுரை நூல் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’. ஜப்பான் … மேலும்
சிங்கப்பூரின் பத்திரிகை, புனைவுகள் ஊடாகச் சிங்கை மக்களின் நேற்றையதும் இன்றையதுமான சமூக வாழ்க்கையை ஆய்வின் வழிக் கண்டு தெளியும் கட்டுரை நூல் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’. ஜப்பான் ஆக்கிரமிப்பு, வெளிநாட்டுப் பணிப் பெண்கள், பாலியல் விழுமியங்கள், குற்றங்கள், தண்டனைகள், தொன்மங்கள் ஆகியன சமகாலச் சிங்கைப் புனைவுகளில் கையாளப்பட்டிருக்கும் தன்மையைச் சுவாரஸ்யமான நடையில் வெளிப்படுத்துகிறது இந்நூல். நூலாசிரியரின் பரந்துபட்ட, அதே சமயம் ஆழமான வாசிப்பு, நுட்பமான பார்வை, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் விளைவால் சொற்களில் உறுதி, கருத்தில் தெளிவு கூடுகிறது. சிங்கப்பூர் என்றதும் தமிழ்நாட்டார் மனத்தில் எழும்பும் ‘பழைய இலக்கிய மகாத்மியங்களும் வியாக்கியானங்களும்’ என்ற பழஞ்சித்திரத்தைக் கலைக்கிறது இக்கட்டுரை நூல். பொருளில் நவீனம், பார்வையில் நவீனம், நடையில் நவீனம் என நூல் முற்றிலும் நவீன படைப்பு. ஆய்வுத் திறத்தால் க. கைலாசபதியின் ‘அடியும் முடியும்’ நூலை நினைவூட்டும் ஆய்வுலகின் புதிய வெளிச்சம் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’. பழ. அதியமான்
ISBN : 9788194302711
SIZE : 13.9 X 0.7 X 21.5 cm
WEIGHT : 131.0 grams