Your cart is empty.
சூலப்பிடாரி
நிகழ்ந்த நிஜம், எதார்த்தமான வரலாறு என்பதுபோலச் சொல்லப்படும் கதைகளின் பின்னிருக்கும் கற்பிதத்தைக் கலைத்துப் பார்ப்பதன் வழியாக உருவாகும் அபத்தத்தை நகையுணர்வுடன்கூடிய மொழியில் முன்வைப்பவை காலபைரவனின் கதைகள். சொல்லவந்த … மேலும்
நிகழ்ந்த நிஜம், எதார்த்தமான வரலாறு என்பதுபோலச் சொல்லப்படும் கதைகளின் பின்னிருக்கும் கற்பிதத்தைக் கலைத்துப் பார்ப்பதன் வழியாக உருவாகும் அபத்தத்தை நகையுணர்வுடன்கூடிய மொழியில் முன்வைப்பவை காலபைரவனின் கதைகள். சொல்லவந்த பொருளைக் காட்டிலும், அதைச் சொல்லத்தேர்ந்த முறையே இக்கதைகளின் நோக்கத்தைப் பெரிதும் பூர்த்திசெய்வதாக அமைகிறது. காலபைரவனுடைய முந்தைய இரு தொகுப்புகளான ‘புலிப்பானி ஜோதிடர்’, ‘விலகிச்செல்லும் நதி’ ஆகியவற்றினின்றும் தெரிவு செய்யப்பட்ட கதைகள் அடங்கியது இத்தொகுப்பு.
காலபைரவன்
காலபைரவன் (பி. 1977) இயற்பெயர் விஜயகுமார். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் வசிக்கிறார். அரசுப் பள்ளியில் ஆசிரியப்பணி. ‘புலிப்பாணி ஜோதிடர்’, ‘விலகிச் செல்லும் நதி’, ‘கடக்க முடியாத இரவு’, ‘பைசாசத்தின் எஞ்சிய சொற்கள்’ ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் ‘ஆதிராவின் அம்மாவை ஏன்தான் நான் காதலித்தேனோ?’ எனும் கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. சல்லிகை எனும் கலை இலக்கிய இணைய இதழின் ஆசிரியராகவும் உள்ளார். மனைவி : சரஸ்வதி மகள்கள் : நித்ய சைதன்யா, அதிதி சம்ரிஷ்தா முகவரி : 25, பட்டித் தெரு, கண்டாச்சிபுரம் அஞ்சல் விழுப்புரம் மாவட்டம் 605701. மின்னஞ்சல் : kalabairavan@gmail.com அலைபேசி : 9944413444
ISBN : 9789352440344
SIZE : 14.0 X 0.7 X 21.5 cm
WEIGHT : 176.0 grams