Your cart is empty.
சுப. உதயகுமாரன் நேர்காணல்கள்
கூடங்குளம் அணு உலைகளுக்கெதிராக மக்களை ஒன்றுதிரட்டிப் போராட்டம் நடத்திய சுப. உதயகுமாரனிடம் நிகழ்த்தப்பட்ட உரையாடல்களின் தொகுப்பு இது. அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் அவர் எதிர்கொண்ட கேள்விக் … மேலும்
கூடங்குளம் அணு உலைகளுக்கெதிராக மக்களை ஒன்றுதிரட்டிப் போராட்டம் நடத்திய சுப. உதயகுமாரனிடம் நிகழ்த்தப்பட்ட உரையாடல்களின் தொகுப்பு இது. அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் அவர் எதிர்கொண்ட கேள்விக் கணைகளின் வழியே, மின் உற்பத்திக்காக நிறுவப்பட்டிருக்கும் அணு உலைகளால் உருவாகச் சாத்தியமான ஆபத்துபற்றி விரிவாக விளக்கியுள்ளார் சுப. உதயகுமாரன். அப்பாவி மக்களின்மீது ஆளும் அரசுகள் மேற்கொள்ளும் இரக்கமற்ற நடவடிக்கைகள் குறித்து அக்கறையுடன் உரையாடும் அவரது தொனியில் அணு உலையின் ஆபத்தும் அது தொடர்பான அச்சமுமே வெளிப்படுகின்றன. சாதாரணர்கள் பற்றிய கரிசனமற்றுச் செயல்படுத்தப்படும் அரசுக் கொள்கைகளுக்கெதிராக சாமானிய மக்கள் சார்பாக எழுப்பப்படும் துணிச்சலான குரல் இந்நூலில் எல்லாப் பக்கங்களிலும் எதிரொலிக்கிறது. அப்பாவி மக்களைச் சூழ்ந்துநிற்கும் அணு உலை ஆபத்து குறித்து அறிவியல்பூர்வமாக அவர் முன்வைக்கும் கருத்துகள் ஆழ்ந்து பரிசீலிக்கத்தக்கவை.
ISBN : 9789352440580
SIZE : 13.8 X 1.6 X 21.4 cm
WEIGHT : 340.0 grams
This is a collection of interviews with S.P. Udayakumaran, who spearheaded the protests against the Kudankulam Nuclear plant. S.P. Udayakumaran explains the possible dangers underlying the Nuclear plants built to supply electricity by answering the questions he faced in various print and visual media. His voice is filled with empathy and concern for the innocent people who face oppressive actions of the ruling government and the fear of the dangers of nuclear plants. The voice of the common people, raised against government policies that sideline them, reverberate across the pages of this book. His scientifically informed opinions on the dangers common people face because of nuclear plants are worthy of consideration and discussion.










