Your cart is empty.


தமிழ் நாவல் இலக்கியம்
இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான தத்துவார்த்த நூல் என்ற வகையில் கைலாசபதியின் ‘தமிழ் நாவல் இலக்கியம்’ தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய … மேலும்
இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான தத்துவார்த்த நூல் என்ற வகையில் கைலாசபதியின் ‘தமிழ் நாவல் இலக்கியம்’ தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய நூல்களில் சிறப்பிடம் பெறுகின்றது. எம்.ஏ. நுஃமான் தமிழுக்குள் நாவல் புதிதாகப் புகுந்தது; எழுத்தறிவுப் பரவலையொட்டி வளர்ந்தது; இலக்கியமா இல்லையா என்னும் விவாதத்தில் சிக்கி நிலைபெற்றது. தோன்றி அரை நூற்றாண்டு கடந்தும் தமிழ் உயர்கல்வியுலகம் நாவலை எதிர்கொள்ளத் தடுமாறியது. இத்தகு சூழலில் கலாநிதி க. கைலாசபதி வரலாறும் திறனாய்வும் கலந்த நோக்கில் 1950களில் தமிழ் நாவல்களைக் கண்டு காட்ட முற்பட்டார். தொடர்ந்து அவர் எழுத நேர்ந்த பிற கட்டுரைகளும் சேர்ந்து ‘தமிழ் நாவல் இலக்கியம் - திறனாய்வுக் கட்டுரைகள்’ என இந்நூல் உருப்பெற்றது. நெடுங்கதையாயினும், நாவல் காப்பியத்திலிருந்து வேறுபட்டது; புனைகதையாயினும், சிறுகதையிலிருந்து வேறுபட்டது; பெரிதும் யதார்த்தவாதம் சார்ந்தது; இயற்பண்புவாத இடையீடு கொண்டது என இந்நூல் விளக்குகிறது. தமிழ்நாவல் வரலாற்றுப் போக்கில் தழுவல்களின் பின்னணியையும் தராதரத்தையும் இந்நூல் அலசுகிறது; 1960கள் வரையிலான தமிழ் நாவல் போக்கை மதிப்பிடுகிறது. கைலாசபதி அதுவரை வெளிவந்த குறிப்பிடத்தக்க பல நாவல்களைத் தமக்கேயுரிய நடையில் சரளமாகத் திறனாய்ந்து காட்டியிருப்பதைப் படிப்பது அறிவார்ந்த சுவை நல்கும் அனுபவமாகும். பா. மதிவாணன்
ISBN : 9789386820105
SIZE : 13.8 X 1.2 X 21.5 cm
WEIGHT : 300.0 grams