Your cart is empty.
திருடன் மணியன்பிள்ளை
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: குளச்சல் மு. யூசுப் |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | தன்வரலாறு | தன்வரலாறு / வாழ்க்கை வரலாறு மொழிபெயர்ப்புகள் |
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் தானாகவே வாதாடுவார். இவரது குறுக்கு விசாரணைகள், போலீஸ் அதிகாரிகளும் நீதிபதிகளும் பயப்படுமளவுக்கு அமைந்திருக்கும். ஒருபுறம் மனிதத்தன்மை யற்றதாக இருக்கும் இவரது செயல்பாடுகளினுள் ஏழைகள் மீதான உள்ளார்ந்த பரிவும் இடைகலந்திருக்கும். திருவனந்தபுரத்திலிருந்து ஒரு முஸ்லிம் பெண்ணை வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்ட இவர் ஒரு கட்டத்தில் திருடிய பொருளுடன் குடும்பத்தோடு மைசூருக்குச் சென்று வீதியோரத்தில் பாயாசக் கடை தொடங்குகிறார். பிறகு யூசுஃப் பாட்சா எனும் பெயரில் அங்கே புகையிலை விவசாயத்தில் ஈடுபட்டு ஏழைப் பங்காளன் எனப் பெயர் பெறுகிறார். பிறகு மைசூரில் இவரது வளர்ச்சி கர்நாடக மாநில முதலமைச்சருடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் பறக்கும் அளவுக்கு முன்னேறுகிறது. மக்களவைத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுகிறார். மக்கள் செல்வாக்கு மிகுந்தவரும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவருமாக இருப்பதால் ‘மாண்புமிகு’கூட இவரது கைக்கெட்டும் தூரத்தில் வந்து நிற்கிறது. இந்நிலையில், இவர் மைசூரிலிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு வந்த கேரளக் காவல் துறை இவரைக் கைது செய்கிறது. ஒரே இரவுக்குள் சம்பாதித்த அத்தனைச் செல்வங்களையும் இழந்துவிட்டு வெறுங்கையுடன் கேரளத்திற்குக் கொண்டுவரப்படுகிறார் மணியன்பிள்ளை. This is the story of an innocent man who underwent jail terms for the crime he did not commit. He is a great thief; He plans meticulously like a military officer for every theft. His cross examinations in the court (he do not engage any lawyer for his defence) often frighten even the senior advocates. He is a modern Robin Hood in a way and his story runs like a well written crime novel.
ஜி.ஆர். இந்துகோபன்
ஜி.ஆர். இந்துகோபன் (பி. 1974) 19.04.1974இல் கேரளா, கொல்லம் மாவட்டம், இரவிபுரம், வாழத்துங்கலில் பிறந்தார். திருவனந்தபுரம் மலையாள மனோரமா நாளிதழில் முதுநிலை உதவியாசிரியராகப் பணியாற்றி வருகிறார். படைப்புகள்: ‘பூமி மயானம்’, ‘மணல் ஜீவிகள்’, ‘கொடி அடையாளம்’, ‘எஸ். முதலலாயனி - 100% முதலை’, ‘வெள்ளி ஆந்தை’ எனும் நாவல்களும், ‘விந்து வங்கியில் பெண்குழந்தை’, ‘ஒற்றைக்கால் பிணம்’ எனும் குறுநாவல்களும், ‘இருட்டுப் பத்திரிகையாசிரியர்’, ‘இரவில் ஆட்டோவில் ஒருவன்’ எனும் சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று துப்பறியும் நாவல்களும். திரைப்படங்கள்: ‘சிதறியவர்’ திரைக்கதை, ‘அப் அன்ட் டவுண்’ வசனம், ‘ஒற்றைக்கை மனிதன்’ திரைக்கதை, இயக்கம். விருதுகள்: கேரளத் திரைப்பட விருது, ஜேஸி பவுண்டேஷன் விருது, குங்குமம் நாவல் விருது, அபுதாபி சக்தி விருது, ஆசான் விருது, கேரள சாகித்ய அகாதமியின் கீதா ஹிரண்யன் அறக்கட்டளை விருது.
ISBN : 9789382033004
SIZE : 15.1 X 2.9 X 23.0 cm
WEIGHT : 742.0 grams