Your cart is empty.
உமா வரதராஜன் கதைகள்
தன் அனுபவங்களை, உணர்வுகளைக் கலையாக்கும் ஒருவராக உமா வரதராஜன் அவருடைய படைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர். உமா வரதராஜனின் படைப்புகள் வெளிப்படுத்தும் சமூக யதார்த்தமும் அவை ஏற்படுத்தும் … மேலும்
தன் அனுபவங்களை, உணர்வுகளைக் கலையாக்கும் ஒருவராக உமா வரதராஜன் அவருடைய படைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர். உமா வரதராஜனின் படைப்புகள் வெளிப்படுத்தும் சமூக யதார்த்தமும் அவை ஏற்படுத்தும் கலைப் பாதிப்பும் ஆழமானவை. சமூகம் தன்னகத்தே கொண்டுள்ள பொய்மையை, போலித்தனங்களை, முரண்களை அவை அம்பலப்படுத்துகின்றன. அவற்றுக்கிடையே அகப்பட்டு நசுங்கும் மனித உள்ளத்தின் அவஸ்தையை வாசகன் மனதிலும் தொற்றச் செய்கின்றன. இதுவே இவரது கலையின் வெற்றி. சுமார் முப்பது ஆண்டுகால இடைவெளியில் எழுதப்பட்ட கதைகளின் முழுத் தொகுப்பு இது.
உமா வரதராஜன்
உமா வரதராஜன் (பி. 1956) கிழக்கிலங்கையின் பாண்டிருப்பில் பிறந்தவர். தாத்தா உடையப்பா, தந்தை மாணிக்கம் ஆகியோரின் முதலெழுத்துக்களை இணைத்து உமா வரதராஜன் ஆனார். கலை, இலக்கியம், ஊடகத் துறைகளில் 46 வருடங்களாக இயங்கி வருபவர். ஈழ இலக்கியச் சிற்றிதழ்கள் சிலவற்றுக்கு ஆசிரியராக இருந்தவர். கலை இலக்கியத்துறை சார்ந்து மாகாண, மத்திய அரசுகள் வழங்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். ‘உள்மன யாத்திரை’ சிறுகதைத் தொகுப்பு 1988-89ஆம் ஆண்டுக்கான இலங்கை, வடக்கு - கிழக்கு மாகாண சபை விருதைப் பெற்றது. இவரது சில படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘மூன்றாம் சிலுவை’ நாவல் 2009இலும், ‘உமா வரதராஜன் கதைகள்’ 2011இலும் வெளியாகின. முகவரி: பாண்டிருப்பு-01, கல்முனை, இலங்கை தொலைபேசி: 0094 772852572 மின்னஞ்சல்: umavaratharajan@gmail.com
ISBN : 9789380240848
SIZE : 13.8 X 0.7 X 21.4 cm
WEIGHT : 198.0 grams