Your cart is empty.
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
கவிதை, நாவல், சிறுகதை, திரைப்படம், வாசிப்பு, வாசிப்பின் மீதான வாசிப்பு என்று பலதரப்பட்ட கட்டுரைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது. கவிதை எப்போது வாசகனுடனான உறவைப் பூர்த்தி செய்கிறது, கவிதை … மேலும்
கவிதை, நாவல், சிறுகதை, திரைப்படம், வாசிப்பு, வாசிப்பின் மீதான வாசிப்பு என்று பலதரப்பட்ட கட்டுரைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது. கவிதை எப்போது வாசகனுடனான உறவைப் பூர்த்தி செய்கிறது, கவிதை உணர்வு நிலைக்கும் அறிவு நிலைக்கும் கவித்துவ வெளிக்கும் கவித்துவ அல்லது மாயச்சொல்லிற்கும் இடையேயான உறவு என்ன, கவிதையில் நான்/நீ, நீ/நான் எவ்வாறு, எப்போது கரைந்துபோகிறது, நாவலுக்கும் அதன் கதைசொல்லிக்கும் இடையேயான உறவு எத்தகையது போன்ற கேள்விகளை முன்வைத்து நம்மோடு உரையாடல் நடத்துகிறது. கட்டுரைகள் படைப்பாளியை முன்னிறுத்தாமல், படைப்போடு மட்டுமே உரையாடுகின்றன. தளம், காலம், மொழி, சொல் இவற்றுக்கு இடையேயான மாந்திரீக உறவைக் கண்டடைய நுட்பமாகப் பயணிக்கும் கட்டுரைகள் திறந்த தன்மையிலானவையாக இருப்பதால் இவற்றோடு மேலும் விவாதிக்க நம்மைத் தூண்டுகின்றன. - ராமானுஜம்
ISBN : 9789386820013
SIZE : 14.0 X 1.3 X 21.6 cm
WEIGHT : 276.0 grams