Your cart is empty.
உய்யடா உய்யடா உய்!
‘உய்யடா உய்யடா உய்!’ நூல் தலைப்பு விசிலடிக்கும் இளைஞன் ஒருவனின் உற்சாகசத்தத்தை நினைவூட்டலாம். ஆனால் அது உண்மையில் பட்டினத்தார் பெண் விழைவிலிருந்து விலகவிடுக்கும் கடும் எச்சரிக்கை. இன்றைய … மேலும்
‘உய்யடா உய்யடா உய்!’ நூல் தலைப்பு விசிலடிக்கும் இளைஞன் ஒருவனின் உற்சாகசத்தத்தை நினைவூட்டலாம். ஆனால் அது உண்மையில் பட்டினத்தார் பெண் விழைவிலிருந்து விலகவிடுக்கும் கடும் எச்சரிக்கை. இன்றைய இளைஞரின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்து இலக்கியப் பயிற்சியையும் விடாது நிற்கும் இந்த இடம்தான் இசையின் இலக்கிய இடம். எழுத்தின் சூட்சுமங் களை உணர முடிகிற நுண்ணுணர்வு இசையிடம் இருக்கிறது. கூடவே உணர்ந்ததை நவீன மொழியில் தெறிக்கவிடும் வல்லமை யும். அப்பிராணியாய் வெளித்தோற்றம் காட்டும் இசைக்கு உள்ளே அகன்ற வாசிப்புக்கு கட்டியம் கூறும் உள் முகம் உண்டு. பாரதியும் வள்ளுவனும் இசைக்குள் பாய்ந்திருக்கிறார்கள். நவீன இளைஞனின் பார்வை கொண்ட இசையின் கட்டுரை நூல் இது. அவர் எழுப்பியிருக்கும் விமர்சனக் கட்டிடத்தின் அடிப்படை ரசனை. படிப்பு, உழைப்பு, நுண்ணுணர்வு, ஆழ்ந்த கவனிப்பு வழி யாக அவருக்குள் வந்து சேர்ந்திருக்கும் ரசனை அது. கேலியும் கிண்டலும் காமம் பிடித்தாட்டும் துள்ளலும் இழைந்தோடும் இக்கட்டுரைகளில் மிகைச் சொல் இல்லை. கற்பார்க்கு களிப்பருளும் களிப்பு. பழ. அதியமான்
ISBN : 9789386820020
SIZE : 13.9 X 0.5 X 21.4 cm
WEIGHT : 135.0 grams