Your cart is empty.



வடு
கே. ஏ. குணசேகரனின் ‘வடு’ அவர் அனுபவங்களின் தொகுப்பாக மட்டுமின்றி அந்தக் காலத்தின் பதிவாகவும் இருக்கிறது. ஆசிரியராக வேலை பார்த்த போதிலும் தன்னைப் படிக்க வைக்கத் தனது … மேலும்
கே. ஏ. குணசேகரனின் ‘வடு’ அவர் அனுபவங்களின் தொகுப்பாக மட்டுமின்றி அந்தக் காலத்தின் பதிவாகவும் இருக்கிறது. ஆசிரியராக வேலை பார்த்த போதிலும் தன்னைப் படிக்க வைக்கத் தனது தந்தை பட்ட சிரமங்களைச் சொல்லும்போதும், அந்தக் காலத்திலேயே எட்டாம் வகுப்புவரை படித்திருந்த தனது தாய் சினிமாக் கொட்டகையில் டிக்கெட் கொடுத்து, விறகு வெட்டி விற்று, புல்லறுத்து விற்றுத் தங்களைக் காப்பாற்றியதைச் சொல்லும்போதும், காலை வேளைகளில் ஊறவைத்த புளியங் கொட்டைகளைத் தின்று பசியாறியதைச் சொல்லும்போதும் நம்மிடம் இரக்கத்தைக் கோராத, ஆனால் நம் நெஞ்சின் ஆழத்தைத் தொடுகிற ஆற்றலைக் குணசேகரனின் மொழிபெற்றுள்ளது. இரட்டைமலை சீனிவாசனின் ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ (1939) வெளிவந்த பிறகு தமிழில் எழுதப்பட்ட முதல் தலித் சுயசரிதை நூல் இது.
ISBN : d9788189359072
SIZE : 14.0 X 0.6 X 21.2 cm
WEIGHT : 145.0 grams